புதுடெல்லி, ஆக. 31-
கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்ற வழக்குக ளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை கோட்பாடுகள் திருத்த மசோதா, உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி பல்வேறு பரிந்துரைகளை தற்போது இந்தக்குழு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.குழு செய்த பரிந்துரைகள் வருமாறு:
கற்பழிப்பு வழக்குகளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் மருத்துவர் ஒருவரது மேற்பார்வையில் தான் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். புகார் கொ டுத்த பெண்ணை காவல்நிலையத் துக்கு அழைத்து வராமல் அவரது வீட்டில் வைத்தே விசார ணை நடத்த வேண்டும். விசாரணையை பெண் போலீஸ் அதிகாரி மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைந்தவராக இருந்தால் விசாரணையின் போது அவரது பெற்றோர் அல்லது சமுக பணியாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். சிறுமிகள் கற்பழிப்பு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற போர்வையில் ஒருவரை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கக்கூடாது. தனிநபர் சுதந்திரம் மிக முக்கியம். சாட்சிகள் பல்டி அடிக்காமல் இருக்க அவர்களது வாக்குமூலத் தை எழுத்துபூர்வமாக கையப்பத்துடன் எழுதி வாங்க வேண்டும். மேலும் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களில் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் வாங்க வேண்டும்.
இவ்வாறு பல பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ளது. இவற்றில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக நிலைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Friday, August 31, 2007
கற்பழிப்பு வழக்குகளை பெண் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்
Posted by சிவபாலன் at 8:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
கற்பழிப்பு - வன்புணர்வு?
//Comment - Show Original Post
Boston Bala said...
கற்பழிப்பு - வன்புணர்வு?
August 31, 2007 9:21 PM
//
பாலா, நான் சொல்ல வரலாம் என்று பின்னூட்ட வந்தேன். அதையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.
கற்'பழிப்பு' சொற்களின் புழக்கத்தை தவிர்ப்போம்.
Post a Comment