.

Friday, August 31, 2007

இளையராஜாவுக்கு என்.டி.ஆர். விருது - ஆந்திர அரசு அறிவிப்பு

சித்தூர், ஆக.31-
நடிகர்கள் கிருஷ்ணா, அம்பரிஷ், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு ஆந்திர அரசு சார்பில் என்.டி.ஆர். விருது வழங்கப்படுகிறது.

ஆந்திரா மாநில அரசு சிறந்த கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. 2002க்கு பின்னர் விருது வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

ராஜசேகர ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த விருது வழங்குதல் தகவல் துறையில் இருந்து தெலுங்கு சினிமா துறை வளர்ச்சி கழகத்துக்கு மாற்றப்பட்டது.

விருது பெறும் நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு சிபாரிசு செய்ய 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இதில் டி.எல். காந்தாராவ், எம். பாலையா, எம். மோகன்பாபு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த கமிட்டி 2003 முதல் 2005 வரை 3 ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயரை சிபாரிசு செய்து, மாநில தகவல் துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயணரெட்டியிடம் அனுப்பியது.
இதையடுத்து என்டிஆர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஐதராபாத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று அறிவித்தார்.

அதன்படி 2003ம் ஆண்டுக்கான விருது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கும், 2004ம் ஆண்டுக்கான விருது இசைஞானி இளையராஜா வுக்கும், 2005ம் ஆண்டுக்கான விருது பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ§க்கும வழங்கப்படுகிறது, இதற்கான விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...