.

Friday, August 31, 2007

ஜெய்ப்பூரில் பிராமணர் பந்த்

தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பிராமணர்கள் சில நாள்களுக்கு முன்னால் ஜெய்ப்பூரில் ஊர்வலம் சென்றனர். அப்போது தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பிராமணர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதில் பலர் காயம் அடைந்தனர்.

அதைக் கண்டிக்கவும், தங்களுக்குள்ள ஆதரவை அரசுக்குக் காட்டவும் பிராமணர்கள் புதன்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுக்கு ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

ஜெய்ப்பூரில் பல தொழில், வர்த்தக நிறுவனங்களும் இந்த அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தங்கள் நிறுவனங்களை மூடின. ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவித்திருந்தன.

ஜெய்ப்பூர் பழைய நகரப்பகுதியில் கடைகளை மூடுமாறு பந்த் ஆதரவாளர்கள் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டபடியே வீதிவீதியாகச் சென்றனர்.

நகரில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வீதிகளில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர்.

வரலாற்றில் இருந்திராத வகையில் தங்கள் சங்கம் பந்த் நடத்தியிருப்பதாக சர்வ பிராமண சபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முழு அடைப்புக்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து ஆதரவு அளித்தனர் என்று ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனாவின் மாநில அமைப்பாளர் லோகேந்திர கால்வி குறிப்பிட்டார்.

தினமணி

Spotlight | Jaipur strike nearly total, business affected | Indiainteracts.com
The Hindu News :: Brahmins' body calls for Jaipur bandh today
Brahmins call bandh for reservation

2 comments:

Anonymous said...

//தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பிராமணர்கள் சில நாள்களுக்கு முன்னால் ஜெய்ப்பூரில் ஊர்வலம் சென்றனர். //

அவர்கள் கோரிக்கை நிறைவேற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

100 விழுக்காட்டு இடங்களை சாதிகளுக்கு ஏற்றவாரு பிரித்துவிட்டு பார்பனர்களுக்கு அவர்களுக்கு உரிய மூன்று விழுக்காடு இடம் கொடுக்கலாம். தவறே இல்லை. அரசு இதை உடனடியாக செய்து பார்பனார்கள் நக்சலைட்டுகளாக மாறுவதை தடுக்க வேண்டும். அனைத்து சாதிகளிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது !

:))

என்னோட 3 செண்ட் !

-o❢o-

b r e a k i n g   n e w s...