திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இரு தொழிலதிபர்கள் காணிக்கையாக கொடுத்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளிக் கலசங்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறங்காவலர் குழுவினரும், துணை ஆணையர் வாசுநாதனும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சரியாக இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அப்போது, சிவாச்சாரியார்கள் பொறுப்பில் இருந்த, தொழிலதிபர்கள் கொடுத்த தங்க, வெள்ளிக் கவசங்கள் கணக்கில் வராதது தெரிய வந்தது. கோவிலுக்குச் சொந்தமான பொருட்களின் பட்டியலிலும் அவை இடம் பெறவில்லை.
இதுகுறித்து சிவாச்சாரியார்களிடம் விசாரித்தபோது, கோவில் மூலமாக அவை தரப்படவில்லை என்றும் நேரடியாக சிவாச்சாரியார்களிடம் வழங்கப்பட்டது தெரிய வந்தது. கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகையை சிவாச்சாரியார்கள் எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம், அவை தற்போது எந்த நிலையில் உள்ளன, எங்கே உள்ளன, இப்படி எடுத்துச் செல்லப்பட்டது அந்த தொழிலதிபர்களுக்குத் தெரியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Missing of Rs 5 lakh worth golden kalasams create flutter in Tiruvannamali temple
Wednesday, May 2, 2007
திருவண்ணாமலை கோவில் கலசங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள்
Posted by Boston Bala at 7:32 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment