.

Wednesday, June 13, 2007

சிக்குன் குனியா:மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை.

சிக்குன் குனியா தடுப்பு மருந்து என்று விற்றால் நடவடிக்கை.

சிக்குன் குனியா நோய் தடுப்பு மருந்து என்று தனியார் மருந்துக் கடைகளில் எவரேனும் தன்னிச்சை யாக மருந்து, மாத்திரைகளை விநியோகித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார். சிக்குன் குனியா நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜன், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் தீனபந்து உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் இல்லை. ஆயினும், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோய் தடுப்பு மருந்து, மாத்திரை உள்ளது. வருகிற 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தேதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த இரு நாட்களும் எல்லா பகுதிகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வெளி மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு சிக்குன் குனியா நோய் அறிகுறி இருந்தால் அருகில் உள்ளமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு முழுவதுமாக நோய் நீங்கி குணமான பிறகுதான் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப் படுவார்கள். இதற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எல்லையோர பகுதிகளில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிக்குன் குனியா நோய் கொசுக்களை ஒழிப்பதற்கு கம்பூசியா என்ற மீன்கள் பயன்படுகிறது என்று அறியப்பட்டு இருப்பதால் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தவகை மீன்களை வளர்த்து கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிக்குன் குனியா நோய் தடுப்பு மருந்து என்று தனியார் மருந்து கடைகளில் எவரேனும் தன்னிச்சையாக மருந்து, மாத்திரைகளை விநியோகித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி என்ற கிராமத்தில் இறந்தவர் இந்த நோய் தாக்கி இறக்கவில்லை. மூச்சுதிணறல் காரணமாக இறந்தார் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...