.

Thursday, June 14, 2007

தயாநிதிக்குப் பதிலாக வரவில்லை - கனிமொழி.

'திமுகவிலிருந்து தயாநிதி மாறன் வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வெளியேற்றப்பட்டதால் தான் நான் அரசியலில் ஈடுபட்டேன் என்று கூறுவது தவறு. கட்சியில் பல்வேறு தலைவர்கள் என்னை அரசியலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்ததால் இப்போது வந்துள்ளேன்.' என்று புதிய. தி.மு.க எம்.பி கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டதால் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை. திமுகவில் நம்பிக்கையும், பலமும், அரசியலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தயாநிதியால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப அவர்களால் முடியும்.

அவருடைய வெற்றிடத்தை நிரப்ப என்னை மத்திய அரசியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. தயாநிதி மாறனால் என் தந்தை கருணாநிதி வருத்தப்பட்டது உண்மைதான். இதுபோன்று நடந்திருக்க கூடாது. எனக்கும் இதில் வருத்தம் உண்டு.

கலைஞருக்கு எந்த பிரச்சனையும் ஒரு பொருட்டல்ல. அவர் பொது வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்களை கடந்து வந்துள்ளார்.

திமுகவில் பல்வேறு அதிகார மையங்கள் இருப்பதாக கூறுகின்றனர். தயாநிதி மாறனை நீக்கியதன் மூலம் கட்சியில் ஒரே அதிகார மையம் தான் உள்ளது, அந்த அதிகார மையம் அண்ணா அறிவாலயம் மட்டும் தான் என்பது அனைவருக்கும் விளக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் தயாநிதிக்கு ஏற்பட்ட முடிவு தான் ஏற்படும். இந்த நடவடிக்கைக்கு காரணமும் அதுதான்.

திமுகவில் தயாநிதி போன்றவர்கள் வந்துள்ளனர், சென்றுள்ளனர். அவர்களால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது, தொடர்ந்து செயல்படும்.

எங்கள் குடும்பத்துடனும், கட்சி தலைமையிலும் நெருக்கமாக இருந்தவர்கள் எத்தனையோ பேர் மன வருத்தம் ஏற்படுத்தி வெளியேறியுள்ளனர். தயாநிதி பிரச்சனையும் அது போலத்தான். தயாநிதியால் ஏற்பட்ட மனவருத்தம் என் தந்தைக்கு இன்னும் நீங்கவில்லை.

எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

கலைஞர் டிவி பற்றி பெரியதாக எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதில் வழக்கமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட புதுமையான நிகழ்ச்சிகள் இடம் பெறும் என நம்புகிறேன் என்றார் கனிமொழி.

1 comment:

வாசகன் said...

//தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டதால் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை. --------------------- . தயாநிதியால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப அவர்களால் முடியும். //

இதை 'ஒரு கவிஞர் அரசியல்வாதியாகிறார்'னு சொல்லலாமா?

-o❢o-

b r e a k i n g   n e w s...