.

Monday, June 4, 2007

அமீரகத்தில் பொது மன்னிப்பு

அமீரகத்தில் முறையான நுழைமதி, பணி செய்ய் உரிமை, குடியுரிமை இல்லாதவர்கள் அனைவரும்எவ்விதமான தண்டனையும் பொருட்சேதமும் இன்றி தங்கள் தாயகத்திற்கு திரும்பும் வகையில் அமீரக அரசு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் அனுமதியின்றி இங்கே தங்கியிருக்கும் தொழிலாளர்கள், தங்களது புரவலரிடமிருந்து தப்பித்து சென்று தனியாக பணிபுரிகிறவர்கள், தங்கள் பணிக்காலம் முடிந்த பின்னும் எவ்வித முறையான அனுமதியுமின்றி இங்கேயே தங்கி விட்ட்வர்கள் என்று சட்டத்திற்கு முரணான வகையில் தங்கி விட்டவர்கள அனைவருக்கும் அமீரகத்தை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அமீரகத்தில் துபாயில் மட்டுமே சுமார் மூன்று லட்சம் அங்கீகாரமற்ற தொழிலாளர்கள் சட்டத்திற்கு முரணாகப் பணியாற்றுவதாக ஒரு தகவலறிக்கை சொல்கிறது. இதில் 80% இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இன்னும் மூன்று மாத காலத்திற்குள் அமீரகத்தை விட்டு வெளியேறாதவர்கள் பொது மன்னிப்பு காலம் முடிந்ததும் க்டும் தண்டனைக்குள்ளாவார்கள் என்றும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

கால்கரி சிவா said...

இந்த மாதிரி "பொது மன்னிப்புகள்" அவ்வபோது வழங்கி பார்த்திருக்கிறேன். அடிமைகள் வேண்டும் என்றால் கேட்டை திறந்து விடுவது, வேண்டாமென்றால் "பொது மன்னிப்பு" தந்து அனுப்புவது. இதெல்லாம் சகஜம் அரேபியாவில்

சிறில் அலெக்ஸ் said...

எப்ப ஊருக்கு வர்றீங்க ஆசிப்
:))

-o❢o-

b r e a k i n g   n e w s...