.

Monday, June 4, 2007

பயணிகளை மறுக்கும் டாக்ஸி டிரைவர்கள்!

(மின்னசோட்டா), ஜூன் 3: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், குடித்திருப்பவர்களை வாடகைக் காரில் ஏற்றிச் செல்ல சில முஸ்லிம் டிரைவர்கள் மறுப்புத் தெரிவித்து முரண்டுபிடிக்கின்றனர்.

இதனால் அவர்கள் விமான நிலைய அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், மின்னபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வாடகைக் கார் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்களில் பலர் சோமாலியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

இவர்கள் குடித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்களை காரில் ஏற்றிச் செல்ல மறுத்து வருகின்றனர். இந்த வகையில் 2002-ம் ஆண்டில் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்ல அவர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இதையடுத்து இப்பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல, நகருக்குள்ளும் யாராவது மது வகைகளை வாங்கிச் சென்றால் அவர்களையும் ஏற்றிச் செல்ல இந்த டிரைவர்கள் மறுக்கின்றனர்.

பலர் இத்தகைய சூழ்நிலையில் வேறு வாடகைக் காரில் ஏறிச் சென்று விடுகின்றனர். ஆனால் காரில் வாடிக்கையாளர்கள் ஏறிய பிறகு, அவர்கள் மது வாங்கிச் செல்வது தெரிந்தால் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர், இந்த டிரைவர்கள்.

சோமாலிய நாட்டில் இருந்து குடிபெயர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மின்னசோட்டாவில் வசித்து வருகின்றனர். இதனால் இதுபோன்ற கலாசார வேறுபாடுகள் அங்கு தலைதூக்குகின்றன. இங்கு சில கடைகளில், காசாளர்கள் உள்ள சில முஸ்லிம்கள் பில் போடும்போது பன்றிக் கறியை தொடமறுப்பதும் நடக்கிறது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...