.

Thursday, July 19, 2007

வாஸ்துவால் விளைந்த தீ விபத்து - பெண் பலி.

சென்னை கொசப்பேட்டை வெங்கடேச நாயக்கன் தெரு வைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீபா (வயது 24). இவர்களுக்கு பவித்ரா (5), கீர்த்தனா (2) 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வெங்கடேசனுக்கும் தீபாவுக்கும் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இது சம்பந்தமாக அந்த பகுதியில் குறி சொல்லும் வாஸ்து நிபுணர் ஒருவரை வெங்கடேசன் அணுகி உள்ளார்.

அவர் வெங்கடேசன் தங்கியிருக்கும் வீட்டை ஆய்வு செய்து வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கிழக்கு பக்கம் வாசல், ஜன்னல் போன்றவை இருக்கக்கூடாது. எனவே இவற்றை அடைத்து விட்டு தெற்கு பக்கம் வாசல் மற்றும் ஜன்னல் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என அறிவுறுத்தி இருக்கிறார்.

அவரது பேச்சை கேட்ட வெங்கடேசனும் சமையல் அறையை ஒட்டி இருந்த கிழக்கு பக்க வாசல் ஜன்னல் போன்றவற்றை செங்கற்களால் அடைத்தார். இதனால் சமையலறைக்கு எந்தவித காற்றோட்டமும் கிடைக்கவில்லை.

இன்று காலை 6 மணி அளவில் பால் காய்ச்சுவதற்காக தீபா சமையலறைக்கு சென்றார். அங்கிருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து அடுப்பில் தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்தார். சில தீக்குச்சிகள் எரியவில்லை.

சமையலறை குறுகிய அளவில் இருந்ததால் திறக்கப் பட்ட கியாஸ் அறை முழுவதும் பரவியது. அப்போது தீபா உரசிய தீக்குச்சி பற்றியது. இதனால் குபீரென்று பிடித்த தீயில் தீபா சிக்கினார். அவர் அணிந்திருந்த நைலான் நைட்டியில் தீ பட்டதால் உடலில் தீ பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

செய்வதறியாது திணறிய தீபா அறையில் அங்குமிங்கும் ஓடி தீயை அணைக்க முயன்றார். படுக்கையில் உருண்டார். தீ அணையவில்லை. வீட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பொருட்களும் எரிய தொடங்கியது. உடனடியாக அங்கிருந்த வெங்கடேசன் எவ்வளவோ போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 2 குழந்தை களையும் காப்பாற்றினார்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இணை போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின்பேரில் ஓட்டேரி போலீசார், இன்ஸ்பெக்டர் முருகேசன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயை அணைத்தனர். அதற்குள் தீபா கருகி பலியானார். போலீசார் பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் வாஸ்து கோளாறுக்காக கதவு, ஜன்னல்களை அடைத்ததன் காரணமாகவே இந்த தீ விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...