ஆந்திர சட்டமன்றத்தையே உலுக்கிய நிகழ்ச்சிக்கு காரணமான தனது பேச்சிற்கு அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திரபாபு நாயுடுவிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மன்னிப்பைக் கோரினார். திங்களன்று சட்டமன்றத்தில் தன்னை அவமதித்ததாக நாயுடு கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக 35 எம் எல் ஏக்கள் சட்டமன்றத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தி இன்று கைதாயினர். சட்டமன்றத்திலும் அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
NDTV.com: Andhra CM apologises to Naidu
Tuesday, July 24, 2007
சந்திரபாபு நாயுடுவிடம் மன்னிப்பு கோரினார் ஆந்திர முதல்வர்
Posted by மணியன் at 6:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் வருவது தான் அதிசயம் என்று நினைத்தால், இந்நாள் முதல்வர் மன்னிப்பு கேட்கும் அதிசயமும் நடக்கிறது..ஆந்திரா பரவால போல இருக்கே !!
ஆந்திராவில் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக்கொள்ளும் படத்தை தினமலரில் பார்த்தேன், ஒரு தமிழனாக ஏங்கிடத்தான் முடிந்தது.
நல்ல முன்னுதாரணம்.
அவர்கள் கைகுலுக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதைவிட தமிழகம் போல எதிரிகளாய் இருந்து கொஞ்சமாவது நல்லது செய்வதே சிறந்தது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரி-அரசியல் கலாச்சாரமும் ஒரு முக்கிய காரணம். எதிலும் ஒரு போட்டி மனப்பான்மை இருக்க வேண்டும்.
//அவர்கள் கைகுலுக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதைவிட தமிழகம் போல எதிரிகளாய் இருந்து கொஞ்சமாவது நல்லது செய்வதே சிறந்தது.//
கை குலுக்கிக்கொண்டாலும், தனிநபர் விரோதம் பாவித்தாலும் மக்களை எல்லாருமே ஏமாற்றுபவார்கள்தான் என்பது உண்மைதான்.
/தமிழகம் போல எதிரிகளாய் இருந்து கொஞ்சமாவது நல்லது செய்வதே சிறந்தது/ - என்பதை புரிய முடியவில்லை.
கைகுலுக்கிக்கொள்பவர்களும், 'தீயசக்தி' என்று பரஸ்பரம் திட்டிக்கொள்பவர்களும் தங்களை அறியாமல் கொஞ்சமாவது நல்லது செய்து விடுகிறார்கள் தான்.
ஆனால், அரசியல் நாகரிகம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா, அது தமிழ்நாட்டில் இருக்கிறதா?
Post a Comment