.

Tuesday, July 24, 2007

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் சஸ்பெண்டு!

பிரதிபா பட்டேலுக்கு வாக்களித்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்றது. இதில் குஜராத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர். பாஜக கூட்டணி வேட்பாளர் செகாவத்துக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா பட்டேலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நரேந்திரமோடிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்கள்தான் கட்சி மாறி வாக்களித்தது தெரியவந்தது. இந்தநிலையில் பிரதிபா பட்டேலுக்கு வாக்களித்த கோர்கான், ஜடாபியா, பலுபாய்தாண்டி, பெசர்பாய்பதானி, பவுக்பாய்உகந்த், திருபாய் சுஜீரா ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இச்சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாஜக செய்தித்தொடர்பாளர் கட்சி ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதால் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

2 comments:

ஜீவி said...

கட்டுப்பாடான கட்சிகளுக்கு இந்த
மாதிரியான கட்டுப்பாடுகள் தேவைதான்.

Anonymous said...

நேற்றே நீங்கள் படிக்கலையா: http://satrumun.blogspot.com/2007/07/blog-post_3076.html

-o❢o-

b r e a k i n g   n e w s...