.

Tuesday, May 8, 2007

ச: மருத்துவ கவுன்சிலிங் ஜுலை 2

மருத்துவ கவுன்சிலிங் ஜுலை 2-ந்தேதி தொடங்குகிறது: விண்ணப்பங்கள் 28-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது

சென்னை, மே.8-

தமிழ் நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் (சென்னையில் மட்டும் 3 கல்லூரிகள்) உள்ளன. இங்கு மொத்தம் 1,645 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் உள்ளன. இது தவிர, ஈரோடு பெருந்துறையில் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் தனியே 60 இடங்கள் இருக்கினëறன.

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்விகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பிளஸ்-2 மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த வருடம் மே 22-ந்தேதி வெளியானது. இந்த வருடம் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் வெளியிட அரசுத்தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணியில் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்கள் எதிர்பார்த்த மருத்துவக்கல்வி கவுன்சிலிங் மற்றும் விண்ணப்பத்திற்கான அனைத்து தகவல்கள் அடங்கிய அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (பல்மருத்துவம்), ஆகிய படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடர்பாக முழுவிவர அறிக்கை வெளியிடும் தேதி 27.5.2007. விண்ணப்பங்கள் 28.5.2007 முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற கடைசிநாள் 15.6.2007-ந்தேதி மாலை 5 மணிவரை ஆகும்.

மாணவர்களின் மார்க் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள் 22.6.2007. முதல் கட்ட கவுன்சிலிங் தொடக்க நாள் 2.7.2007. முதல் கட்ட கவுன்சிலிங் முடியும் நாள் 8.7.2007. மாணவர்கள் கல்லூரியில் சேரும் நாள் 18.7.2007. வகுப்புகள் தொடங்கும் நாள் 1.8.2007. 2-ம் கட்ட கவுன்சிலிங் தொடங்கும் நாள் 25.8.2007. 2-ம் கட்ட கவுன்சிலிங் முடியும் நாள் 28.8.2007. 2-ம் கட்ட கவுன்சிலிங் முடிந்து மாணவர்கள் கல்லூரியில் சேரும் நாள் 30.8.2007.

அனைத்து மாணவர் சேர்க்கையும் முடிவடையும் நாள் 30.9.2007.

ஒரு காலத்தில் மருத்துவ படிப்பையே மாணவர்கள் மிகவும் விரும்பி படித்தனர். ஆனால் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்தால் போதாது என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவும் பி.இ. முடித்துவிட்டு கம்ப்ïட்டர் துறையில் பணிபுரியும் என்ஜினீயர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சத்திற்கும் அதிமாக கிடைக்கிறது. இதனால் பெற்றோர் டாக்டர்களாக இருந்து தனியாக மருத்துவமனை நடத்தி வருபவர்கள் விரும்பி மகன் மற்றும் மகளை படிக்க வைக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்தாவது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க வைக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மருத்துவ படிப்பை விட என்ஜினீயரிங் படிக்கவே விரும்புகிறார்கள்.

கடந்த வருடம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்த 2 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேராமல் என்ஜினீயரிங்கில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு குறைந்த இடங்களே இருப்பதாலும், பிளஸ்-2 கணித தேர்வு எளிதாக இருந்ததாலும், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கணிதத்தில் 200-க்கு 200- மதிப்பெண்கள் வாங்க இருப்பதால் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...