.

Tuesday, May 8, 2007

சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு

போட்டி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவை பார்க்கவும்


இது சற்றுமுன் தளத்தின் ஆயிரமாவது பதிவு.

சாதனை விவரம் இங்கே...

1. சற்றுமுன் 999

2. ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

சற்றுமுன்... ஆயிரம் பதிவுகளை எட்டுவதை முன்னிட்டு மாபெரும் போட்டியை நடத்துகிறது. இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி.

போட்டிக்கான செய்திக்கட்டுரைகளின் வகைகள்:-

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம்/வணிகம்

மேற்கண்டவற்றில் எந்த வகையின் கீழூம் செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் .

செய்திக்கட்டுரைகளின் விபரம்:-

நடப்புச் செய்திகளையோ அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையோ தொகுத்து முடிவுகளை எட்டும் கட்டுரைகளை வரையலாம்.

ஒரு தலைப்பின் கீழ் சில செய்திகளைத் தொகுத்து முடிவுகளைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, 'பெண்ணியம் ' எனும் தலைப்பின் கீழ் செய்திகள் , புள்ளிவிபரங்களைக் கொண்டு கட்டுரை வரையலாம். நானோ நுட்பம் (Nanotechnology) குறித்த செய்திக் கட்டுரை எழுதலாம்.

ஏற்கனவே வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் வரையலாம்.

செய்திகளை நையாண்டி செய்யும் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள் :

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 1500/- மதிப்புள்ள புத்தகங்கள்

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 500/- மதிப்புள்ள புத்தகங்கள்.

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 15 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். அதாவது கீழுள்ள ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் மூன்று சமமான பரிசுகள்

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம் /வணிகம்

வித்தியாசமான கட்டுரைக்கான பரிசுகள்:-

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 500/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு)

சிறப்பு பரிசுகள் :-

போட்டிக்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு தகுதி பெறும் கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு .

பரிசுகளில் உங்களின் விருப்பம்:-

வெற்றி பெற்றவர் விரும்பினால் பரிசுத் தொகையைத் தான் விரும்பும் ( அல்லது சற்றுமுன் தேர்ந்தெடுக்கும்) ஒரு சமூக சேவைக்கு வெற்றி பெற்றவரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும் .

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி :

பதிவர்கள் தங்கள் பதிவுகளில் பதித்துவிட்டு satrumun@gmail.com ற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யலாம் .

அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகத் தரலாம்.

எந்தப் பிரிவின் கீழ் கட்டுரை சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியரே குறிப்பிடவேன்டும். இப்படிக் குறிப்பிடப்படாத கட்டுரைகளுக்கு சற்றுமுன் குழுவே பிரிவைத் தேர்ந்தெடுக்கும் .

பதிவர் அல்லாதவர்களும் முடிந்தவரை தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். ஒருங்குறியில் எழுத இயலாதவர்கள் மட்டும் பிற எழுத்துருக்களிலும் அனுப்பலாம்.

கட்டுரைகளை அனுப்ப கடைசி நாள் : ஜூன் 10, 2007

சில விதிமுறைகள் :

போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை போட்டியில் சேர்த்துக் கொள்வது சற்றுமுன் குழுவின் முடிவே.


ஏற்கனவே வெளியான படைப்புகள் ஏற்கப் பட மாட்டாது.

மே 8 மற்றும் அதற்குப் பின் எழுதப் பட்ட விமர்சனக் கட்டுரைகளாக இருக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

பரிசு ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப் படும்

போட்டியின் விதிகளை மாற்றி அமைக்கவோ புதிய விதிகளை ஏற்படுத்தவோ உள்ள அதிகாரத்தை சற்றுமுன் தக்கவைத்துக் கொள்கிறது.





குறிப்பு:
மேலே உள்ள சற்றுமுன் 1000 போட்டிக்கான பேனரில் சுட்டி நேரடியாக இந்த பதிவை அடையலாம்

40 comments:

மணியன் said...

நூறு நாட்களுக்குள் ஆயிரம் பதிவுகள் !!
சற்றுமுன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் !!!!

உண்மைத்தமிழன் said...

ஏற்கெனவே வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரைகளை போட்டிக்கு அனுப்ப முடியுமா?

ஒருவர் எத்தனை கட்டுரைகளை, எத்தனைப் பிரிவுகளில் அனுப்பலாம்?

✪சிந்தாநதி said...

வாழ்த்துக்கள் மணியன்.

சரியாக 83 நாட்களில்! நிச்சயம் சாதனைதான்.

உண்மைத் தமிழன்

நியாயமான கேள்விகள். சற்றுமுன் குழுவினர் இதுகுறித்து முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார்கள்.

✪சிந்தாநதி said...

உண்மைத் தமிழனின் கேள்விக்கு பதில்கள்.

ஏற்கனவே வெளியான படைப்புகள் ஏற்கப் பட மாட்டாது. மே 8 மற்றும் அதற்குப் பின் எழுதப் பட்ட விமர்சனக் கட்டுரைகளாக இருக்க வேண்டும்.


ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.


பரிசு ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப் படும்* (இது குறித்த விரிவான விதிமுறை பின்னர் அறிவிக்கப் படும்.

வெட்டிப்பயல் said...

//ஏற்கனவே வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் வரையலாம்.//

புனைவு இருக்கலாமா???

சிறில் அலெக்ஸ் said...

புனைவு கதையாக அல்லாமல் கட்டுரை வடிவில் இருக்கலாம்.

நாளை நம் வீடுகளில் எற்படும் மாற்றம், போக்குவரத்து, அலுவலகம், சுற்றுச் சூழல் நம்மில் ஏற்படுத்தும் மாற்றம் என கட்டுரை வடிவில் தரவேண்டும்.

கதை வடிவங்களில் அல்ல. கட்டுரைகளுக்கு செய்தி ஆதாரம் இருப்பது வலு சேர்க்கும்.

CVR said...

இந்த போட்டிக்கான என்னுடைய இடுகை இதோ

அறிவியல்/நுட்பம் தலைப்பின் கீழ் என் கட்டுரையை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!
நன்றி! :-)

உண்மைத்தமிழன் said...

இந்த போட்டிக்கான என்னுடைய இடுகை இதோ - http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_15.html என்னும் இந்த அட்ரஸில் உள்ளது.

'அரசியல்' தலைப்பின் கீழ் என் கட்டுரையை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!
நன்றி! :-)

Albert Fernando said...

சொக்கா..சொக்கா...எங்கப்பா போன?
சற்று முன் பரிசு 1500 ரூபாய் புத்தகங்களாமே!
ஐயோ! ஐயோ! நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்?
சொக்கா! எத்தனை படைப்பு வேணும்ன்னாலும் அனுப்பலாம்ங்கிறாங்க!
ஆனா ஒரு பரிசு ஒருவருக்குன்னு கொழப்புறாங்களே?!
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு முதல் பரிசு உண்டே!
ஒவ்வொரு பிரிவில் கலந்துகிட்டாலும் ஒருவருக்கு ஒரு பரிசுதானா?
அப்படீன்னா ஒருவருக்கே ரெண்டு முதல் பரிசு கெடைக்காதா?
இந்தச் சொக்கன் இந்த நேரம் பாத்து எங்கயோ போயிட்டானே?
எனக்கு யாரு பதில் சொல்வாங்க???????

சிறில் அலெக்ஸ் said...

ஆல்பர்ட்...
இட்தூக்குப் போயி பாவம் சொக்கன ஏன் டிஸ்டர்ப் செய்யுறீங்க. :)

நிறையபேருக்கு பரிசு தரும் நோக்கத்தில்தான் அப்படி செய்திருக்கோம்.

பரிசு பெறும் வாய்ப்பு அதிகமில்லையா?

பி.கு: 'கொங்குதேர் வாழ்க்கை' ஏற்கனவே ஒரு போட்டியில பங்குபெற்றதால ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.:)

சேதுக்கரசி said...

அன்புடன் நோட்டீஸ் போர்டில் தகவல் அனுப்பியிருக்கேன். செய்திகள்னாலே எனக்கு அலர்ஜி மாதிரி.. மத்தவங்களுக்காவது உபயோகப்படும்னு தான் :-) வாழ்த்துக்கள் சற்றுமுன்!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சேது..

உண்மைத்தமிழன் said...

'அரசியல்' என்னும் பிரிவில் சற்றுமுன் போட்டிக்காக புதிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். எனது பதிவில் http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_24.html இந்த இடுகையில் உள்ளது.

பினாத்தல் சுரேஷ் said...

வீட்டு கனெக்ஷன் பெண்டு கழட்டுது. இதுக்கு முன்னாலேயே இந்த பின்னூட்டம் வந்திருந்தா எதாச்சும் ஒண்ணு போடுங்க!

சற்றுமுன் குழுவிற்கு,

என் கட்டுரை - வாகன மாசுக்கட்டுப்பாடு - நாம் என்ன செய்ய முடியும் - ஐ அறிவியல் / நுட்பம் பிரிவில் போட்டிக்காக சமர்ப்பிக்கிறேன்.

ulagam sutrum valibi said...
This comment has been removed by the author.
ulagam sutrum valibi said...

சமூகம் தலைப்பில் மே15 தமிழ் நாடு பிராமணனர் சங்கம் வேண்டு கோள் கருத்தின் கீழ் எழுதப்பட்டகட்டுரையை போட்டிக்கு சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி என் சுட்டி
www.ulagamsutrumvalibi.blogspot.com

CVR said...

ஒளிவருடங்கள் பற்றிய என்னுடைய இந்த பதிவை போட்டியில் சேர்க்க விரும்புகிறேன்.
நன்றி

இலவசக்கொத்தனார் said...

படங்களுடன் கூடிய பயணக்கட்டுரை சென்று வந்த இடத்தைப் பற்றிய குறிப்பினையும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கு வழிகாட்டியாவும் இருக்கலாம். அது எந்த தலைப்பில் வரும் எனத் தெரியவில்லை. போட்டிக்கு உகந்ததாயின் சேர்த்துக் கொள்ளவும்.

சுட்டி - http://elavasam.blogspot.com/2007/05/blog-post_28.html

உண்மைத்தமிழன் said...

'சமூகம்' என்னும் பிரிவில் சற்றுமுன் போட்டிக்காக புதிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். எனது பதிவில் http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_29.html இந்த இடுகையில் உள்ளது.

உண்மைத்தமிழன் said...

'சமூகம்' என்னும் பிரிவில் சற்றுமுன் போட்டிக்காக புதிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். எனது பதிவில் http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_30.html இந்த இடுகையில் உள்ளது.

உண்மைத்தமிழன் said...

'சமூகம்' என்னும் பிரிவில் சற்றுமுன் போட்டிக்காக புதிய கட்டுரை ஒன்றை "என் சொத்துக்கள் முழுவதும் உங்களுக்கே" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனது பதிவில் http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_31.html இந்த இடுகையில் உள்ளது.

லோகேஷ் said...

நான், இந்தியா 2020-ல் வல்லரசாகுமா ? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வரந்துள்ளேன். தொடுப்புகள் இதோ,

http://logesh.co.in/files/india in 2020.odt

(or)

http://logesh.co.in/files/india in 2020.pdf

ஷைலஜா said...

http://shylajan.blogspot.com/2007/06/blog-post.html

சற்றுமுன் விமர்சப்போட்டி.சமூகம்-எனும் தலைப்பிற்கு என் பங்காக இது நன்றி.

Anonymous said...

என் பங்குக்கு...

http://xavi.wordpress.com/2007/06/05/ragging/

http://sirippu.wordpress.com/2007/06/05/dnaissue/

அன்புடன்
சேவியர்

CVR said...

அறிவியல் எனும் தலைப்பின் கீழ் ,போட்டிக்கான என்னுடைய இன்னொரு இடுகை இதோ.
http://cvrintamil.blogspot.com/2007/06/4.html

நன்றி!!

☼ வெயிலான் said...

நானும் கூட........
http://veyilaan.wordpress.com/2007/06/06/

MSATHIA said...

இதோ என் பங்களிப்புகள்.
வித்தியாயமான தலைப்பு மற்றும் உள்ளடக்குத்துக்கு இது(http://msathia.blogspot.com/2007/05/blog-post_14.html),

பொருளாதாரம்/வணிகம் குறித்த விமர்சனத்துக்கு இது
(http://msathia.blogspot.com/2007/06/blog-post_02.html)

எந்த தலைப்பில் வருதுன்னு தெரியாத இது (http://msathia.blogspot.com/2007/06/blog-post_03.html)

நுட்பத்துக்கு நாளைக்கு வாரேன்.

அன்புடன்,
சத்தியா

MSATHIA said...

சொன்னமாதிரி வந்துவிட்டேன்.
நுட்பத்துக்கு இதோ
http://msathia.blogspot.com/2007/06/blog-post_426.html

உண்மைத்தமிழன் said...

'சமூகம்' என்னும் பிரிவில் சற்றுமுன் போட்டிக்காக புதிய கட்டுரை ஒன்றை "யாரிடம் இருக்கிறது நாகரிகம்?" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனது பதிவில் http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_09.html இந்த இடுகையில் உள்ளது.

உண்மைத்தமிழன் said...

'சமூகம்' என்னும் பிரிவில் சற்றுமுன் போட்டிக்காக புதிய கட்டுரை ஒன்றை "நான் எந்த ஜாதி?" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனது பதிவில் 'http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_11.html' இந்த இடுகையில் உள்ளது.

Anonymous said...

யோவ்... கடைசி நாளை இன்னும் சீக்கிரமா வச்சிருக்க கூடாதா! இந்த உண்மைத் தமிழன் தொல்லை தாங்கல!

☼ வெயிலான் said...

இந்த இரு இடுகைகளையும் போட்டிக்காக எடுத்துக்கொள்ளவும்.
http://veyilaan.wordpress.com/2007/06/06/
http://veyilaan.wordpress.com/2007/06/12/

☼ வெயிலான் said...

தலைப்புகளை தேர்வு செய்து அதனடிப்படையில் தான் இடுகைகளை அனுப்பவேண்டுமா? அல்லது இடுகைகளுக்கேற்றபடி தலைப்புகள் தேர்வு செய்து கொள்வீர்களா? விளக்கவும்.

கதிரவன் said...

இந்தப்போட்டியில் "சமூகம்" பிரிவின் கீழ் எனது இந்தப் பதிவைச் சேர்த்துக்கொள்ளவும்.

http://vrkathir.blogspot.com/2007/06/blog-post_11.html (ரஜினி 'பக்தர்'கள் முதல் 'உண்மை'த் தொண்டர்கள் வரை..)

நன்றி !!

வவ்வால் said...

சற்று முன்னில் இப்படி ஒரு போட்டி இருப்பதை சற்று முன் தான் பார்த்தேன் எனவே நானும் குட்டையை குழப்ப தொபுக்கடீர் என்று போட்டியில் குதிக்கிறேன். இன்று வலைப்பதிவு செய்த வரலாற்று கட்டுரையை போட்டிக்கு பதிவு செய்கிறேன். வரலாறு என்ற தலைப்பே இல்லை சமூகம்/அரசியல் என்று போட்டுக்கொள்ளலாமா?

சுட்டி: http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_12.html

CVR said...

வேற்று கிரகத்தில் உயிர் என்ற தலைப்பின் கீழ் நான் எழுதிய இந்த பதிவை அறிவியல்/நுட்பம் எனும் தலைப்பின் கீழ் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

CVR said...

போட்டிக்கான என்னுடைய இன்னொரு பதிவு
http://cvrintamil.blogspot.com/2007/06/6.html

CVR said...

மேற்கூரிய பதிவை அறிவியல் பிரிவில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
நன்றி

உண்மைத்தமிழன் said...

'சமூகம்' என்னும் பிரிவில் சற்றுமுன் போட்டிக்காக புதிய கட்டுரை ஒன்றை "யார் செய்தது குற்றம்?" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனது பதிவில் 'http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_29.html' இந்த இடுகையில் உள்ளது.

நாகை சிவா said...

வணக்கம்!

சற்றுமுன் போட்டிக்காக,

பதிவின் தலைப்பு - உகாண்டா ஒரு பார்வை

பதிவின் சுட்டி - http://tsivaram.blogspot.com/2007/06/blog-post_19.html

நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...