ஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?
ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது.
அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.
சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்தக் குழு அமைந்ததுதான். அனுபவம் மிக்க, செய்திகளை படிப்பதிலும் பகிர்வதிலும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் குழுவின் உறுப்பினர்களானதுதான் சற்றுமுன்னுக்கு கிடைத்த முதல் வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.
1000 பதிவுகளில் சிங்கப்பூரில் உணரப்பட்ட நில நடுக்கத்தை கோவி. கண்ணன் சிவபாலனுக்கு தெரிவிக்க மற்ற ஊடகங்களில் செய்தி ஏதும் வ்வரும் முன்னரே சற்றுமுன்னில் வந்த பதிவு ஒரு முக்கிய பதிவாக அமைந்தது எனச் சொல்லலாம். இதுதான் சற்றுமுன்னின் முக்கிய நொக்கம். உலகெங்குமுள்ள பதிவர்கள்மூலம் செய்திகளை சேகரித்து வெளியிடுவது. ஒரு மாபெரும் சேவையை நம்மால் இதன்மூலம் உருவாக்க இயலும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது நடந்த பின்னூட்ட உரையாடல்கள் இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு.
வெறும் சற்றுமுன் வந்த செய்திகளுக்கென்ற தளம் ஒரு செய்தி சேவையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த உருமாற்றமும் சற்றுமுன்னின் உறுப்பினர்களாலேயே சாத்தியமானது.
இன்று ஆயிரம் பதிவுகளைத் தாண்டி சிறப்பாக செயல்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. தினம் குறைந்தபட்சம் 500 முதல் 600 பக்கங்கள் வரை பார்வையிடப் படுகின்றன(Total hits).
பின்னூட்டங்களே அதிகம் இல்லாமல் இத்தனை பதிவுகளைத் தந்தது எப்படி என சென்னை சந்திப்பின்போது பலரும் கேட்டனர். அது சற்றுமுன் குழுவின் உறுப்பினர்களின் மனப்பாங்கையே காண்பிக்கிறது.
வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட சற்றுமுன் குழுவை ஊக்குவியுங்கள். செய்திகளைப் படிப்பதோடு நிற்காமல் அவற்றின் மீதான விமர்சனங்களை பின்னூட்டுங்கள். விவாதங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முயலுங்கள்.
சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பை படித்துவிட்டீர்களா? இதில் பங்களித்து சிறப்பியுங்கள்.
பதிவர்கள் ஒன்றாய் செயல்படுவது அரிதாய் தோன்றலாம் ஆனால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேறு எதுவும் வழி இருப்பதாய் தெரியவில்லை. புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.
பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. சற்றுமுன் போன்ற குழுத் தளங்களும் குழுக்களும் இதை துரிதப்படுத்துகின்றன என்றே சொல்வேன்.
உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி.
அன்புடன்,
சிறில் அலெக்ஸ்
15 comments:
சிறில்
தங்களின் சீறிய முயற்சியால் உருவான இப்பதிவு இன்று நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.
இருப்பினும் இம்முயற்சி வெற்றியடைந்தற்கு உங்களுக்கும் நம் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சற்று முன் தான் வந்தாலும்
வெற்றிடமாய் இல்லாமல்
கற்றவரும் காமுறுவண்ணம்
பற்றற்று பதிவிட்டு இன்று
ஆயிரம் தொட்ட சற்றுமுன்னை
வாழ்த்தி வரவேற்கிறேன்
ஆயிரம் பதினாயிரமாகட்டும்
பல லட்சங்கள் ஆகட்டும்
பயனுள்ள சேவை பலகாலம்
தொடரட்டும் என!
சிறில் எப்போது சீறினார்!
அமைதியானவர் ஆயிற்றே அவர்!
ஓ! ஓ! சீரிய முயற்சியா!
எழுத்துப்பிழையா சிபா!
:)))
சீரிய, சீறிய ஆனது!
:))
நன்றி சி.பா
நன்றி எஸ்.கே
ஒரு முக்கியமானவரை விட்டுவிட்டேன்.
பதிவை மறிவடிவமைத்த நண்பர் சிந்தாநதிக்கு சிறப்பு நன்றியும் பாராட்டும்.
சிறில்...! சீரிய சேவை...இது...நான் பதிவுகளைப் படிக்க ஆரம்பத்தவுடன் நாளிதழ்களை மிகுதியாக படிப்பதில்லை. உங்கள் முயற்சியின் காரணமாக சுடச் சுட (சுட்ட செய்திகள்) படித்து உலக நடப்புகளைத் தெரிந்து கொள்கிறேன். 1000 மைல் கல்களைத் தொட்டது சாதனை !
எமது பங்களிப்பும், களிப்பும் தொடரும். சற்றுமுன் உறுப்பினர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள் 1000.
- கோவி.கண்ணன்
வாழ்த்துக்கள்
//புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.
பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை//
very optimistic statements. இதற்காகவே உங்களைப் பாராட்டியாக வேண்டும்.
குறைந்த காலத்தில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. மேலும் மேலும் வளரவும், கிளைக்கவும் வாழ்த்துக்கள்
2007 தமிழ் வலைப்பதிவுல நல் நிகழ்வில் நிச்சயம் சற்றுமுன்னைக் குறிப்பிட முடியும். இது போன்ற முயற்சிகள் இந்திய, உலக வலைப்பதிவுலக அளவில் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்!
அயராது தொடர்ந்து செய்திகள் அளித்த பாஸ்டன் பாலா, சிவபாலன், மணியன், சிந்தாநதி, சிறில் மற்றும் குழுவுக்குப் பங்களிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வலைப்பதிவுலகுக்கு வெளியேயும் சற்றுமுன்னைப் பிரபலப்படுத்தும் வகையில் இனி சற்றுமுன்னின் செயற்பாடுகள் இருந்தால் நன்றாக இருக்கும்
வாழ்த்துகள் :)
எனக்கு தனிமடலில் சிறில் அவ்வப்போது சங்கடத்துடன் நெளிந்து ஆலோசனை சொன்ன மாதிரி தினமணி, பிபிசி, மட்டும் நம்பியிராமல் இனி மொழியாக்க செய்திகளையும் செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்து என் பேச்சை முடித்துக் கொள்கிறேன் :P
//........தேர்தல் வாக்குறுதி கொடுத்து என் பேச்சை முடித்துக் கொள்கிறேன் :P //
பாபா,
இதை முடித்ததும் கரவொலியும், விசிலும் கேட்டுதா?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
ஆயிரம் வா(ழ்)த்துக்கள்!
சிறில்,
மனதில் தோன்றிய பொறியை தழலாக்கி செயலாக்கம் கொடுத்து அருமையான குழுவை ஒருங்கிணைத்து வெற்றி காண்கின்ற உங்களுக்கும் மற்ற குழு ஆர்வலர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ! எனது வலை மேய்வதிலும் ஒரு நோக்கத்தை கற்பித்ததிற்கு உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
ஆஹா.. பாபா உங்கள் தாக்கம் :))
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் ... வாழ்த்துக்கள்...
:)
:)))
உண்மையில் இது மிகப்பெரிய சாதனை.
இன்னும் பல மைல்கற்களை கடந்து செல்ல குழுமனப்பான்மைக்கு என் வாழ்த்துக்கள்...
சென்ஷி
Post a Comment