புதுதில்லி, மே 8: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு அதிமுக ஆதரவளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார் கர்நாடகத்தின் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எஃப்.எஸ். நாரிமன்.
காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, "இது சட்ட ரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை இல்லை. அறிவியல் ரீதியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினை. நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் ஏராளமாக உப்பு நீர் உள்ளது. அதை நல்ல நீராக மாற்றுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். இதற்காக, மத்திய அரசு சிறந்த விஞ்ஞானிகள் குழுவை நியமித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நாரிமன், "இந்த விஷயத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் மாநிலத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. உதாரணமாகச் சொன்னால், கர்நாடகத்தில் உள்ள அதிமுகவினர் கர்நாடகத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்' என்றார். தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. பராசரனும், "அதுதான் உண்மை நிலை' என்று நாரிமனின் கருத்தை ஆமோதித்தார்.
Dinamani
Tuesday, May 8, 2007
காவிரி: கர்நாடகத்துக்கு மாநில அதிமுக ஆதரவு
Labels:
தமிழ்நாடு,
நதிநீர் பிரச்சினை
Posted by
Boston Bala
at
11:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment