மயிலாடுதுறை தர்மாவரம் ஆதினத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் உட்பட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர், அதில்,
தமிழ் பண்பாட்டு மையத்தின் சத்திவேல்முருகன் உள்பட சிலர் திருமணம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற விழாக்களில் யாகம் வளர்த்து தேவாரம், திருவாசகம் பாடுகிறார்கள். ஆகம விதிகள் படி கோவில்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தேவாரம், திருவாசகம் பாடப்பட வேண்டும்.
தற்போது பலரும் தேவாரம், திருவாசகத்தை ஆகம விதிகளை கடைபிடிக்காமல் இஷ்டப்படி பாடுகிறார்கள். எனவே இதற்கு கோர்ட்டு தடை விதிக்க வேண்டும். மேலும் தேவாரம் திருவாசகத்தை இஷ்டப்படி பாடியதற்காக ரூ.10 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் திருமணம், கும்பாபிஷேக விழாக்களில் தேவாரம் திருவாசகம் பாட இடைக்கால தடை விதித்தார். மாலைமலர்.
Monday, June 11, 2007
தேவாரம், திருவாசகத்துக்கு இடைக்கால தடை!
Posted by வாசகன் at 6:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
இவனுங்க ரவுசு தாங்க முடியல..ம்ம்ம்
சாமியை நினைச்சுப் பாட நேரமும் காலமும் எதுக்கு..கொடுமை
வழக்குத் தொடர்ந்திருப்பது தருமபுரம் ஆதினம். திருவாசக்த்தை எங்கு பாட வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர்கள் யார். தேவாரமும்,திருவாசகமும் இவர்கள் குடும்பச் சொத்தா இல்லை இவர்கள் பாடியதா. சிவபெருமான நெற்றிக் கண்ணை கொஞ்சம் திறந்து இவர்களை சாம்பலாக்க மாட்டீரா?
இதில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்.அடுத்து இளையராஜா மீது கேஸ் போடுவார்களோ ?
அவனுங்க தான் அறிவுகெட்டத் தனமா மனு கொடுத்தாங்கன்னா.. தடைவிதிச்ச நீதிபதிக்கு எங்க போச்சு அறிவு. கறியள்ளிப் போட்டக் கண்ணப்பனுக்கே காட்சி தந்தவரு நம்ம சிவசு. கொஞ்ச நாளா சோம்பேறித் தனம் காரணமாகத் திருவாசகம் பாடுறத நிறுத்தி இருந்தேன். இனி வலைப்பதிவுக்கு வரும்போதெல்லாம் பாடிகிட்டேதான் வருவேன். சனநாயகத்துல இதுக்கெல்லாம் நம்ம அரசியல் சட்டத்திலேயே தடை கிடையாது. முடிஞ்சா நீங்களும் பாடலாம். மதத்தோட பேரைச் சொல்லி கத்திய தூக்கிகிட்டு அலையலாமாம் ஆனால் கடவுளை நினைச்சுப் பாடக்கூடாது. நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Post a Comment