.

Monday, June 11, 2007

48 புராதன கோயில்களை புனரமைக்க திட்டம்

சென்னை, ஜூன் 10:

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற 48 புராதன திருக்கோயில்களை புனரமைக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு இதற்கான உதவியை மத்திய அரசிடம் நாடியுள்ளது.

நாயன்மார்களால் பாடப்பெற்ற சைவ திருத்தலங்களும், ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருக்கோயில் களும் தமிழ்நாட்டில் பல இருக்கின்றன. அவற்றில் 48 புராதன திருக்கோயில் கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.

இந்த திருக்கோயில்களை புனரமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 12வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி கிடைத்துள்ள மானியத் தொகையான 9.87 கோடி ரூபாயை பயன்படுத்த திட்டமிட்டு விரைவில் பணி தொடங்கப்பட உள்ளது


மேலும் செய்திக்கு "மாலைச்சுடர்"

1 comment:

Anonymous said...

இந்த அல்பங்கள் எதற்கு இந்த மாதிரி காரியத்தை செய்யணும்?எல்லாத்தையும் இடித்து தள்ளிவிட்டு ஒரு 1000 (தாடிகாரரோட) சிலைகள் வைத்தா நல்லா இருக்காது?

-o❢o-

b r e a k i n g   n e w s...