.

Monday, June 11, 2007

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தீர்ப்பு.

மீண்டும்ஒத்திவைப்பு.
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் வருகிற 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமசாமி அறிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் கடந்த 1993ம் ஆண்டு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதில், 11 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா உள்பட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் பாட்ஷா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இமாம் அலி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். பழனிபாபா படுகொலை செய்யப்பட்டு விட்டார். முஷடாக் அகமது தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். மற்றவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கை தனி நீதிமன்ற நீதிபதி ராமசாமி விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்து ஏப்ரல் 18ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.பின்னர் மே 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 11ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தயாராகவில்லை என்று கூறிய நீதிபதி ராமசாமி ஜூன் 21ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்து அறிவித்தார். இந்த வழக்கில் மொத்தம் 431 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதிசாட்சிகள் விசாரணை தொடங்கியது. 1994ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...