.

Friday, June 22, 2007

மதுரை தேர்தலை ஒத்திவைத்தால் உண்ணாவிரதம் : கருணாநிதி

துரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை ஒத்தி வைத்தால் தமிழக முதல்வர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார், என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்தார்.

வன்முறை, விதிமீறல், பணப்பட்டுவாடா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல அதிகாரி நரேஷ் குப்தா, அவரசமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மதுரை நிலவரம் குறித்து அவர் விவரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் டெல்லியில் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

வரும் 26ம் தேதி மதுரை மேற்குத் தொகுதியில் சுமூகமான முறையில் வெளிப்படையான தேர்தல் நடத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வரும் நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது. அப்படி ஒத்திவைத்தால் முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

நன்றி: Yahoo! Tamil

இதன் முன் வந்த செய்தி:
தலைமைத் தேர்தல் ஆணையருடன் இன்று மதுரை நிலவரம் குறித்து குப்தா ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, மதுரை தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...