சென்னை, மே 12: மதுரையில் இருந்து சென்னை வந்த மு.க.அழகிரி, போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் வழியாகச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. சென்னை தீவுத்திடலில் முதல்வர் பொன் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரையில் இருந்து சென்னைக்கு பாரமவுன்ட் விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை வந்தார். அப்போது, பாரமவுன்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கார் ஒன்று மு.க.அழகிரியை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. பின்னர், அவர் போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் எண் 1-ல் வெளியேறினார்.
பிரதமர் வருகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி, மு.க.அழகிரி அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது, இதற்கான அனுமதியை வழங்கியது யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இத்துடன் மு.க. அழகிரி, வி.ஐ.பி. கேட் வழியாக அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் என்ன? என்பது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, "மு.க.அழகிரியின் வேண்டுகோளுக்கு இணங்க பாரமவுன்ட் நிறுவனத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) அனுமதி பெற்று, வி.ஐ.பி. கேட் வழியாக அவரை அழைத்துச் சென்றனர்" என்று தெரிவித்தனர்.
Dinamani
Saturday, May 12, 2007
விமான நிலையத்தில் விதிகளை மீறிய அழகிரி
Posted by Boston Bala at 1:47 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment