.

Saturday, May 12, 2007

வரலாறு காணாத உயர்வு: கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.47

நாமக்கல், மே 12: கோழிப் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.47 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டுக்குப் பிறகு கிலோ ரூ.46 என்பதே உட்சபட்ச விலையாக இருந்தது. இந் நிலையில், பல்லடத்தில் வெள்ளிக்கிழமை (மே 11) கூடிய பிராய்லர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலையை கிலோ ரூ.47 ஆக நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.

மீன்வரத்து குறைந்துள்ளதால் கேரளத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. இனப் பெருக்கத்துக்காக கடலில் மீன்பிடிக்க தடை விதித்திருப்பதாலும் கறிக்கோழி விலை அபரிதமாக உயர்ந்துள்ளது. இது பண்ணையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முட்டை விலை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையும் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1.90 காசுகளாக உள்ளது. இது கோழிப் பண்ணைத் தொழிலுக்கே மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...