.

Saturday, May 12, 2007

ச: அப்துல் கலாமுக்கு அமோக ஆதரவு

புதுடெல்லி, மே 11-

அப்துல் கலாமே மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நடத்திய சர்வேயில் 72 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்கலாம் வரும் ஜூலை 17-ம் தேதியுடன் முடிகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. 750 எம்.பி.க்களும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேரும் ஓட்டு போட்டு நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நாட்டின் முக்கிய கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட உள்ள ஜனாதிபதி வேட்பாளர் பற்றி தினமும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்த வாரத்தில் ஒரு சர்வே நடத்தியது. கலாமே மீண்டும் ஜனாதிபதியாவதை விரும்புகிறீர்களா? களத்தில் நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படும் மற்ற பிரபலங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதுதான் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இதில் கலாமுக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அவரை நெருங்கக்கூட முடியவில்லை. மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் தலா 7 சதவீத ஆதரவுடன் 2-ம் இடத்தில் உள்ளனர். மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, பொருளாதார மேதை அமர்தியா சென்னுக்கு ஆதரவாக தலா 5 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. துணை ஜனாதிபதி ஷெகாவத்துக்கு 4 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். அரசியல்வாதி அல்லாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பவர்கள் 74 சதவீதம் பேர்.
இன்டர்நெட் வழியாக டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய சர்வேயில் கலாம் 53%, நாராயணமூர்த்தி 24%, ஷெகாவத் 14%, அமர்தியா சென், ஜோதிபாசு, சட்டர்ஜி தலா 3% ஓட்டு பெற்றுள்ளனர்.

இன்டர்நெட் பயன்படுத்தும் படித்த, மேல்தட்டு மக்களைவிட நடுத்தர மற்றும் ஏழை மக்களின் ஆதரவு கலாமுக்கு அதிகம் இருப்பதும் இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.

மாலை முரசு

2 comments:

Boston Bala said...

---நாளிதழ் நடத்திய சர்வே---

:))

G.Ragavan said...

அப்துல்கலாம் வீட்டுக்கு இன்னமும் ஆட்டோ போகலையா! அவருக்கு மக்கள் ஆதரவு இருக்குன்னு எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அரசியல்வாதிகள். குறிப்பா காங்கிரஸ்...அவங்களுக்குத்தான் கலாம் வேப்பங்காயா கசக்குறாரே!

-o❢o-

b r e a k i n g   n e w s...