.

Saturday, May 12, 2007

ச: மம்முட்டிக்கு எம்.பி. பதவி

நடிகர் மம்முட்டி இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தது கிடையாது. ஆனால் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.வி. சேனல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் மம்முட்டி அதன் சேர்மனாகவும் இருந்து வருகிறார்.

அதே சமயம் மம்முட்டியின் சகோதரர் முஸ்லிம் லீக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். இவர் தேர்தல்களில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேல்சபை எம்.பி. பதவி வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் சென்னையில் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு மம்முட்டி பேசிய போது குஜராத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருந்திருந்தால் அங்கு இனக்கலவரம் நடந்திருக்காது என பேசினார்.

மம்முட்டியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் மம்முட்டியின் உருவ பொம்மையை எரித்தனர்.

இப்பிரச்சினை இத்துடன் முடியாமல் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெருக்களில் ஊர்வலமாக வந்து அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதீய ஜனதா தொண்டர்கள் நடிகர் மம்முட்டிக்கு எதிராக செயல்பட்டு வரும் சூழ்நிலை யில் வருகிற ஜுலை மாதம் நடைபெற உள்ள மேல்சபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மம்முட்டியை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...