.

Saturday, May 12, 2007

ச:ஓரினச் சேர்க்கை திரைப்படம் தயாரித்த மாணவர்கள் - கேரளாவில் சர்ச்சை

கேரளா சங்கனசெரியில் கத்தோலிக்க திருச்சபை நடத்திவரும் புனித வளனார் ஊடகத்துறை கல்லூரியில் ஓரினச்சேர்க்கைபற்றிய திரைப்படம் எடுத்த மாணவர்கள் ஐந்துபேர் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

'சீக்ரட் மைண்ட்ஸ்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிக்கான படைப்பு என அதை இயக்கிய மாணவர் ஜோ பேபி தெரிவித்துள்ளார்.

கல்லூரி நிர்வாகம் இந்தப் படம் எல்லைமீறியதாக உள்ளதாகவும், மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களை தவறாகப் பயன்படுத்தி இதில் நிர்வாணமாக நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பில் படத்தில் பாதி நிர்வாணமே உள்ளதாகவும், பாடத்திட்டத்துக்குட்பட்டே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Students expelled for making film on homosexuality

தொடர்புள்ள இன்னொரு செய்தி

1 comment:

G.Ragavan said...

ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்குவதில் நம்மவர்கள் பெரியவர்கள். கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் செய்தியாகியிருக்காது. பலருக்கும் தெரிந்திருக்காது. இப்பொழுது! எதிர்ப்பதினாலேயே விளம்பரம் தேடித்தருவதில் இந்தியர்கள் பெரியவர்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...