.

Friday, July 13, 2007

ஹரியானா: கலப்பு திருமணத்துக்கு மரணதண்டனை.

ஹரியானா மாநிலம் நுகோ கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் வசித்த ரிம்பி என்ற உயர் சாதிப் பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலை வளர்த்து வந்தனர். இருவரது காதலை அறிந்ததும் கிராமத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு ஓட்டம் பிடித்தது.அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில நாட்கள் கழித்து பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக சொந்த ஊர் திரும்பினார்கள்.காதல் ஜோடி வந்ததை அறிந்ததும் கிராமமக்கள் பொங்கியெழுந்தனர். கிராமப் பஞ்சாயத்து அவசரமாக கூட்டப்பட்டது.

சில மணி நேர காரசார வாக்குவாதத்திற்கு பின் நாட்டாமை தீர்ப்பு கூறினர். அவர் கூறும்போது, "ஊரின் கட்டுப்பாட்டை மீறி கலப்பு மணம் செய்து கொண்ட இரு வருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்'' என்றார். இதை கேட்டதும் புதுமணத்தம்பதி அதிர்ச்சியில் உறைந்து
போனார்கள்.அன்று நள்ளிரவே இருவரும் டெல்லிக்கு தப்பிச்சென்று அங்குள்ள ஆஸ்காஸ் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இருவரின் உயிருக்கும் நுகோ கிராம மக்களால் எந்நேரமும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கலப்பு மண ஜோடிக்கு மரண தண்டனை விதித்த நாட்டாமை மற்றும் கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...