.

Tuesday, June 5, 2007

ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட்.

டிக்கெட் வாங்க ஆளில்லை!!!

சென்னையில் நடைபெறவுள்ள ஆப்ரோ-ஆசிய கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை படு மந்தமாக நடந்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நம் அணி வாங்கிய அடியை வீரர்கள் ஒருவேளை மறந்திருக்கலாம். ஆனால் ரசிகர்கள் ஜென்ம ஜென்மத்துக்கும் மறக்கப் போவதில்லை. இது எல்லா வகையிலும் பிரதிபலித்து வருகிறது. ஆப்பிரிக்க லெவன் அணிக்கும், ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாளை இந்தியாவில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு 20-20 போட்டி நடைபெறவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ஆனால், டிக்கெட் வாங்கத் தான் ஆள் இல்லை. கூவிக் கூவி டிக்கெட் விற்கும் படுமோசமான நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த ரியாக்ஷனை முன்கூட்டியே அறிந்ததாலோ என்னவோ இம்முறை டிக்கெட் விலையை பல மடங்கு குறைத்துத் தான் வைத்துள்ளனர். ஆனாலும் டிக்கெட்களை விற்க முடியவில்லை. முன்பெல்லாம் டிக்கெட் கவுண்டர்களை இரவே ரசிகர்கள் முற்றுகையிட்டு அங்கேயே நின்றபடி தூங்குவார்கள். கவுண்டர் திறந்த ஒரு மணி நேரத்தில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிடும். இப்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் விஜயராகவன் கூறுகையில், பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியை பார்த்த பின் ரசிகர்களின் ஆர்வம் அதிகாரிக்கும். ஆசிய அணியில் சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடததும் (சச்சின் விளையாடிட்டாலும்...!!!) டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இத் தொடருக்காக கட்டணத்தை குறைத்துள்ளோம். காலரிக்கு ரூ. 300 தான் நிர்ணயித்துள்ளோம். அதே போல பல்வேறு டிக்கெட்டுகளும் குறைக்ப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ரூ.5,000 தான் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...