.

Tuesday, June 5, 2007

Pfizer நிறுவனத்தின் மீது நைஜீரிய அரசு வழக்கு

pfizer நிறுவனத்தின் அனுமதி பெறாத மருந்து பரிசோதனைகள், சுமார் இருநூறு நைஜீரிய குழந்தைகளின் உயிர், உடல்நல, மனநல பாதிப்புகளுக்குக் காரணமாக இருந்துள்ளன. இது குறித்து ஏழு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு நைஜிரிய அரசாங்கம் பிஃபைசர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

போன மாதம் இதே காரணங்களுக்காக, நைஜிரியாவின் மிகப் பெரிய மாநிலமான கானோ(Kano)அரசாங்கமும், pfizer நிறுவனத்தின் மீது இரண்டே முக்கால் பில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜிரியாவில் காலரா, அம்மை, போன்ற தொற்றுநோய்கள் பரவியபோது, pfizer நிறுவனமும் உலக சுகாதார நிறுவனமும் சேர்ந்து தன்னார்வத்துடன் இந்த நாட்டுக்கு வந்திருந்து மருந்துகள் விநியோகித்து உதவினர். இந்தச் சமயத்தில் pfizer அனுமதியின்றி பயன்படுத்திய ட்ரோவன் ப்ளோக்ஸின் என்ற மருந்தே சுமார் இருநூறு குழந்தைகளுக்கு meningitis என்ற நோய் தொற்றக் காரணமாகிவிட்டது என்பதே நைஜிரிய அரசாங்கத்தின் வாதம்.

இந்த வழக்கு இந்த மாதம் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. pfizer நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.


Nigeria sues Pfizer over 'killer drugs'

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...