.

Saturday, June 23, 2007

மக்களின் நாயகராக நினைவுகூரப்பட விருப்பம்- கலாம்.


இன்னும் ஒரு மாதத்துக்குள் குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து வெளியேற உள்ள அப்துல்கலாம் தாம் மக்கள் நாயகராக நினைவு கூரப்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவின் தலைமைப்பதவியை அலங்கரித்தவர்களுள் அதிகமான மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, பிரசித்தம் பெற்ற இந்த 76 வயது விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் மாளிகையை 'மக்களின் மாளிகை'யாக மாற்றியதே இந்த ஐந்து வருடத்தில் தமது பணியாக இருந்தது என்றார்.

இம்மாளிகையின் பிம்பம் தமது காலத்தில் மாற்றப்பட்டதையடுத்து அரை மில்லியனிலிருந்து ஒரு மில்லியன் வரையிலான மக்கள் வருடந்தோறும் இம்மாளிகைக்கு வருகைப் புரிந்ததாகவும் அவர் சொன்னார். இம்மாளிகையில் 127 வகை ரோஜா மலர்களைப் பராமரிப்பதில் அக்கறை செலுத்தி வந்த அப்துல்கலாம், கடந்த மார்ச் மாதம் வரை, மொகல் தோட்டத்தில் பார்வையாளர்களைச் சந்தித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

குடியரசுத்தலைவர் மாளிகையின் கண்ணியத்தை உத்தேசித்து இதை அரசியல் மாளிகையா(க்)க தாம் ஒருபோதும் கருதியதில்லை என்றார் அப்துல்கலாம்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...