இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
விடுதலைப்புலிகளின் விமானப்படை பலமும் அதிக ரித்து வருவது சிங்கள ராணு வத்துக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. இராணுவத்தின் கெடுபிடிகளால் சிங்கள வீரர்கள் அதிருப்தி அடைந்து விடு கிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கும் அவர்களால் ஈடு கொடுக்க முடிய வில்லை.
இதனால் இராணுவத்தில் இருந்து சிங்கள வீரர்கள் தப்பி ஓடுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இராணுவத்தில் இருந்து 10 ஆயிரத்து 60 சிங்கள வீரர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தவிர 93 உயர் ராணுவ அதிகாரிகளும் தப்பி ஓடி இருக்கிறார்கள்.
இதனால் இப்போது கூடுதல் இராணுவத்தினரை சேர்க்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரையும், கடற்படைக்கு 15 ஆயிரம் பேரையும், விமானப் படைக்கு 10 ஆயிரம் பேரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தகுதியான வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை.
மாலைமலர்
Sunday, June 24, 2007
இலங்கை: 10 ஆயிரம் இராணுவத்தார் தப்பி ஓட்டம்.
Posted by வாசகன் at 1:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
/* கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இராணுவத்தில் இருந்து 10 ஆயிரத்து 60 சிங்கள வீரர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தவிர 93 உயர் ராணுவ அதிகாரிகளும் தப்பி ஓடி இருக்கிறார்கள். */
இது பாதிச் செய்தி -:)) தப்பி ஓடியவர்களில் 3979 பேர் மீண்டும் இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
Post a Comment