.

Sunday, June 24, 2007

பருவமழை: குமரி மாவட்டத்தில் 300 மின்கம்பங்கள் சாய்ந்தன.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜுன் மாதம் தொடங்கும். இந்த மழையின் தாக்கம் கேரள மாநில எல்லையோரமாக அமைந்துள்ள குமரி மாவட்டத்திலும் இருக்கும். தென்மேற்கு பருவமழை தற்போது குமரி மாவட்டத்தில் வலுவடைந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் பெய்த மழை இரவிலும் தொடர்ந்தது. இந்த மழை நேற்று காலை 10 மணி வரை பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

இந்த மழையால் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை, குலசேகரம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன.

இதேபோல் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், வில்லுக்குறி, குளச்சல், குழித்துறை, களியல், அருமனை, முன்சிறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. 300-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள்தெரிவித்தனர்.இவற்றில், மரங்கள் சாய்ந்து விழுந்ததால் சரிந்து விழுந்த மின்கம்பங்கள் அதிகம். இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தினத்தந்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...