.

Sunday, June 24, 2007

சந்திரபாபுநாயுடு கொலை முயற்சி: நக்சல் தலைவர் பலி.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்லத் திட்டமிட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த மாவோயிட்ஸ் நக்சல் இயக்கத் தலைவர் ராஜா மெளி என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

திருப்பதி அருகே அலிபிரி என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சந்திரபாபு நாயுடு படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த வழக்கில், மாவோயிட்ஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான ராஜா மெளலி என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மெளலிதான் நாயுடுவைக் கொல்லும் திட்டத்தை வகுத்தவர். இவர் மாவோயிஸ்ட் நக்சல் அமைப்பிந் மத்திய குழு உறுப்பினராகவும், மத்திய படை கமிஷனின் உறுப்பினராகவும் இருந்து வந்தார். இதுதவிர கர்நாடக மாநில மாவோயிட்ஸ் செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவர் மீது சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தர்மாவரம் ரயில் நிலையப் பகுதியில் ராஜா மெளலி தனது கூட்டாளிகளோடு வந்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மெளலியும், அவரது ஆட்களும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீஸார் திருப்பிச் சுட்டதில் மெளலி கொல்லப்பட்டார். இருப்பினும் அவருடன் வந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...