குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடது சாரிகள் சார்பில் முன்னாள் இராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஷெகாவத் சுயேச்சையாக களம் காண்கிறார். அவருக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவையும் பாஜக கோரியுள்ளது.
பிரதீபா பாட்டீல் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஷெகாவத் நாளை வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். நாளை முற்பகல் 11.30 மணிக்கு ஷெகாவத் மனு தாக்கல் செய்வார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஓட்டுக் கணக்கைப் பார்த்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் நிலைமை மாறும். ஷெகாவத் அபார வெற்றி பெறுவார்.
ஷெகாவத்துக்கு ஆதரவு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முன்வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதால் எந்த லாபமும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.
Sunday, June 24, 2007
ஷெகாவத் நாளை வேட்புமனு.
Posted by வாசகன் at 1:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment