.

Sunday, June 24, 2007

அப்துல்கலாம் பத்திரிக்கைகளுக்கு அறிவுரை.

"பத்திரிக்கைகள் கேலிச்சித்திரத்தை முதற்பக்கத்தில் வழங்கிவந்த முந்தைய வழக்கத்துக்கு மாற வேண்டும்" என்று அப்துல்கலாம் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பிடிஐ நிறுவன செய்தியாளர்களுடன் நிகழ்ந்த சந்திப்பொன்றில் பதவியிறங்க உள்ள குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பத்திரிக்கையாளர்களுக்கு பொதுவாக இவ்வேண்டுகோளை விடுத்தார்.

"ஆணோ, பெண்ணோ ஒரு வாசகன் காலையில் பத்திரிக்கையை திறந்தவுடன் சிரிப்பதாக அமைய வேண்டும்" என்ற கலாம் "கொலை, கொள்ளை செய்திகளை பின் பக்கங்களுக்குத் தள்ள வேண்டும்" என்றும் சொன்னார். அத்துடன் தனது இளமைக்காலத்தை அவர் நினைவுகூரவும் செய்தார். "அப்போதெல்லாம் முதற்பக்கத்தில் வரும் 'கார்ட்டூனை' மிகவும் ரசிப்பேன்".

"தில்லி மட்டுமே செய்திக்கான கிடங்கு இல்லை" என்ற குடியரசுத்தலைவர் "உதாரணத்துக்கு, பஞ்சாபின் காளிபென் ஆறு மக்கள் முயற்சியால் சுத்தமாக்கப்பட்டது பற்றி எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை" என்றார்.

மேலும் படிக்க...பிடிஐ செய்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...