கான்பூர், மே 17-
உ.பி. அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிராமண வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் முதல்வர் மாயாவதி காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதை தவிர்த்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
உ.பி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. முதல்வராக அக்கட்சியின் தலைவி மாயாவதி பதவியேற்றார். அதன்பின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதில் பலர் முதல்வர் மாயாவதியின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். ஆனால் தாகூர் ஜைவீர் சிங், ரங்கநாத் மிஸ்ரா, ஆனந்த் மிஸ்ரா, நகுல் துபே, தாடன் மிஸ்ரா உட்பட சிலர் மட்டும் காலில் விழாமல் லேசாக தலைவணங்கியபடி மாயாவதியிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். இவர்கள் எல்லாம் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலித் முதல்வர் மாயாவதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவில்லை என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வயதில் மூத்தவர்களின் காலைத் தொட்டு இளையவர்கள் ஆசீர்வாதம் வாங்குவது என்பது இந்திய பாரம்பரிய பழக்கம். பிராமண அமைச்சர்கள் எல்லாருமே முதல்வர் மாயாவதியை விட வயது குறைந்தவர்களாக இருந்தும் அவர்கள் காலில் விழாமல் சென்றுள்ளனர். ஈகோ பிரச்னையைவிட ஜாதி உணர்வு இவர்களுக்கு இன்னும் அதிகம் இருப்பதால் தலித் முதல்வரின் காலில் விழ மறுத்துள்ளனர் என பனராஸ் இந்து பல்கலைக்கழக சமூகவியல் வல்லுனர் பான்டே தெரிவித்துள்ளார்.
- மாலை முரசு
Friday, May 18, 2007
மாயாவதி காலில் விழாத பிராமண அமைச்சர்கள்
Posted by சிவபாலன் at 3:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
25 comments:
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இங்கே பேசும் புனித பிம்பங்கள் யோசிக்கட்டும்
அங்க விழாதது சர்ச்சை. இங்க விழுந்தாதான் சர்ச்சை.
இதுல இட ஒதுக்கீடு எங்க வந்துதோ புரியலை. எல்லாம் கலர் கண்ணாடி மாயம்தான் போல.
போதுமய்யா வேணும்னா காலில் விழறதும், கொஞ்ச நாளில் அப்படியே காலை வாரி விடறதும். மரியாதை எல்லாம் மனசில் இருந்தா போதும். இப்படி பொது இடத்தில் யாரும் விழுந்து காட்ட வேண்டாம்.
At the oath-taking ceremony here, instead of touching Mayawati's feet the Brahmin ministers bent down to pay their obeisance to their political mentor. Some of them even bowed down lower than their waist to express their gratitude to her.
Regarded as a traditional Hindu manifestation of showing respect to the elders, feet-touching in politics too has become an expression of the feudal mindset highly prevalent in India's most populous state.
One Brahmin minister went to the extent of cleverly avoiding to touch Mayawati's feet even as he did so with the chief minister's new found Brahmin mascot Satish Chandra Misra, seated just behind her on the dais.
A conscious Misra subsequently made it a point to ensure that this was not repeated by any other upper caste minister.
- Bignews Network
Brahmin, Muslim ministers avoid touching Mayawati's feet
By IANS
Sunday May 13, 09:28 PM
Lucknow, May 13 (IANS) Newly appointed Brahmin and Muslim ministers in Uttar Pradesh Sunday discreetly avoided touching Chief Minister Mayawati's feet even as most of the other ministers did so to seek her blessings.
- Yahoo News
இப்போ முஸ்லிம் மந்திரிகளும் விழலையே. இப்போ இட ஒதுக்கீடு என்ன ஆச்சு?
இதை சாக்கா வெச்சு பிராமணர்களும் முஸ்லிம்களும் ஒன்றுதான் அப்படின்னு சொல்லலாமா? ரெண்டு பேரும் கைபர் போலன் எல்லாம் தாண்டி ஒரே பக்கத்தில் இருந்துதானே வந்தாங்க. அதனால பங்காளிங்கன்னு பட்டம் குடுக்கலாமா?
சும்மா எல்லாத்துக்கும் இப்படி எதையாவது சொல்லாம இருந்தாலே போதும். இப்படி சம்பந்தம் இல்லாம பேசித்தான் இந்த விஷயங்களுக்கே மரியாதை இல்லாம போச்சு.
//"மாயாவதி காலில் விழாத பிராமண அமைச்சர்கள்"
//
சில நேரங்களில் செலக்டீவாக அவுங்களும் சுயமரியாதை, பகுத்தறிவு வாதிகளாக ஆகிவிடுகிறார்கள் போல !
:)
என்றைக்கு பிராமின் பசங்க பணிஞ்சு போனாங்க? பெரிய கருப்பன் சொல்ற மாதிரி ப்ரம்மாவோட மூக்குச் சளியில் இருந்து வந்தவனுகளாச்சே!
காலில் விழாதவர்களின் மனதில் புகுந்து ஆதிக்கஜாதி உணர்வினால் காலில் விழவில்லையா அல்லது தன்மான எண்ணம் தடுத்தாட் கொண்டதா என்று lie-detector செய்து அறியலாம்.
காலில் விழுவது என்றாலே ஜெஜெ+சசி ஞாபகம்தான் வருகிறது.
---இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இங்கே பேசும் புனித பிம்பங்கள---
எனக்கும் இந்த சம்பந்தம் புரியவில்லை.
காலில் விழாததை பத்திரிகைகள்தான் அரசியலாக்குகின்றன. அமைச்சர்கள் பயபக்தியோடு அடங்கி மட்டுமே இருந்தால் போதும்? தொகுதிக்கு எப்படி உழைக்கிறார்கள் அல்லது திட்டம் தீட்டி மாநிலத்தை எவ்வாறு முன்னேற்றுகிறார்கள் என்பதில் கணக்கு வழக்கை இதே சூட்டிகையுடன், மிடையங்கள் தொடர்ச்சியாக அலசி ஆராய்ந்து வெளியிட்டாலே போதும்...
அடுத்த ஜப்பான் - இந்தியாதான் :)
காலில் விழாதது ஜாதி உணர்வைக் குறிக்குதுண்ணா காலில் விழுவது எதைக் குறிக்கிறது?
உயர்ஜாதி ஓட்டில்தான் மாயாவதி வென்றிருக்கிறார் என ஒரு செய்தி படித்தேன்.
இருவருக்கும் மாயாவதி பாலமாக அமைந்தால் சிறப்பாயிருக்கும் என வாழ்த்துவோம்
பாபா
உங்களுக்கு புரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.
எல்லாம் தெரிந்த நீங்களே.. :)
இடஒதுக்கீடு இருந்தால் சாதியம் நிலைத்துவிடுமாம். இது புபிகளின் கூச்சல்.
ஆனால் இது போன்று மனிதனை தலித் என்று கூறி அவமான்ப்படுத்துவார்கள். அது தவறில்லை.
காலில் விழும் கலச்சாரம் சரி என்று நான் சொல்லவில்லை.
அந்த மனிதன் தாழ்ந்த ஜாதி என்ற பார்வையைத்தான் சாடுகிறேன்.
ஆமாம், இடஒதுக்கீட்டுக்கு எதிராக செய்திகள் வந்தால் நிச்சயம் இந்தியா முன்னேறும். :)) :)) :))
இந்து கலாச்சாரம் காலில் விழுவது. முஸ்லிம் அப்படி இருக்கிறதா என தெரியவில்லை.
கைபர் போலன் இங்கே எங்கே வந்தது..?? :)
சிறில்,
காலில் விழுவது இந்து கலாச்சாரமாம்.. :D
எனக்கு ஒரு சந்தேகங்க ... சிவனின் பாலன் எழுதி பாஸ்டனின் பாலன் எப்படி மறுமொழி லிஸ்டுல வர்றாரு ... சற்றுமுன்ல ஏதோ பதிவு மறுமொழி எம்.ஓ.யூ போட்டு பண்றீங்களா?! :)
இவரில்லை அவரே அப்படின்னு நாட்டை நடனமாடவைக்கும் திட்டமா?
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ...
அதுலையும் சூடான டாபிக்கா இருக்கா ..
எல்லான் ஒரு பொறாமை தான் எனக்கு "எப்படி தைரியமா யார் எழுதிறான்னு!"
//சிவபாலன் said...
ஆனால் இது போன்று மனிதனை தலித் என்று கூறி அவமான்ப்படுத்துவார்கள். அது தவறில்லை.
//
ஆனால் உங்களைப் போன்ற குஞ்சுகள் மட்டும் மூச்சுக்கு முன்னூறு தடவை மனிதனை பார்பான் என்று கூறி அவமானப்படுத்துவீர்கள் - அது சரி- அப்படித்தானே?
முதல்வர் காலில் விழுந்த மந்திரிகள் கண்டனத்துக்குறியவர்கள். விழாதவர்கள் பாராட்டுக்குறியவர்கள். பொது வாழ்கையில், மக்கள் தொண்டாற்ற வரும் பிரதிநிதிகள் ஒரு தலைவனின் காலில் விழுந்தால், அவருடைய பிடிப்பு தலைவன் மட்டுமே என்று பொருள்படும். தனிப்பட்ட சந்திப்புகளின் போது காலில் விழுவது என்ன? பாத பூஜை செய்த நீரையே பருகிக் கொள்ளட்டும். இவர்களனைவரும் சேர்ந்து நாட்டிற்காக உழைக்கப் போவதாக எடுக்கும் உறுதிமொழிக்கு பங்கம் வராமல் நடந்து கொண்டாலே போதும்.
மதுரா :))
காலில் விழும் கலாச்சாரம் மிகத்தவறானது. அது ஜெயாக இருந்தால் என்ன மாயாவதியாக இருந்தால் என்ன...மாயாவதி செய்வதால் மட்டும் தவறு சரியாகாது. காலில் விழாதவர்கள் என்ன நினைத்து விழாமல் இருந்தார்களோ..விழாமை நன்றே. மற்றவர்களும் விழக்கூடாது.
ஒருவருக்கு தன் ஜாதி தாழ்வுமனப்பான்மையைத் தந்திருக்கிரதுமற்றவருக்கு இல்லை எனவும் இதை எடுத்துக்கொண்டு ஆராயலாம்.
தன் ஜாதி, இனம் பற்றிய தாழ்வுமனப்பான்மையை அகற்றவேண்டியது அந்த இனத்துத் தலைவர்களின் கடமையெனில் இதில் மாயாவதி தவறியிருக்கிறார்.
மரியாதையின் நிமித்தமே இது நடந்திருக்கிறதென்றால்... ஜாதி அடிப்படையில் இதை விவாதிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.
அநேகமாக எல்லோருமே தமிழகத்தையும் வட மாநிலங்களையும் ஒப்பிட்டுகிறீர்கள். வடக்கே வயதில் மூததவரின் காலைத் தொட்டுக் கும்பிடுவது வழக்கமாகும் (இந்தி சினிமா பார்ப்பவருக்கும் வட இந்தியாவில் வசிப்பருக்கும் இது நன்கு தெரியும்) அதனால் தான் இது சர்ச்சை ஆகிறது.
// சிவா zei...
அநேகமாக எல்லோருமே தமிழகத்தையும் வட மாநிலங்களையும் ஒப்பிட்டுகிறீர்கள். வடக்கே வயதில் மூததவரின் காலைத் தொட்டுக் கும்பிடுவது வழக்கமாகும் (இந்தி சினிமா பார்ப்பவருக்கும் வட இந்தியாவில் வசிப்பருக்கும் இது நன்கு தெரியும்) அதனால் தான் இது சர்ச்சை ஆகிறது. //
சிவா, வடக்கில் என்பதால் சுயமரியாதை இல்லாமல் வாழலாமா? பிஜேபி மாதிரி கட்சிகளில் இது போன்ற நிலை காணக்கிடைத்தால்...அதிசயப்பட வேண்டாம். அப்படியில்லாமல் அம்பேத்காரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் மாயாவதி இதைச் செய்திருப்பது சரியென்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. பதவி என்று வந்த பிறகு அடுத்தவர் நம் காலில் விழுவதை ரசிப்பது என்பதும் கூட வந்து விடும் போல. மிகவும் வயதான காலத்திலும் பெரியார் யாரையும் தன்னுடைய காலில் விழவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.
//வயதில் மூத்தவர்களின் காலைத் தொட்டு இளையவர்கள் ஆசீர்வாதம் வாங்குவது என்பது இந்திய பாரம்பரிய பழக்கம்//
முதலில் காலில் விழும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.
ஏன் நேராக நின்று ஆசீர்வாதம் பெற்றால் என்ன? ஆசீர்வாதம் வழங்குவதில்தான் என்ன பிரச்சினை.
மரியாதை எல்லாம் செயலிலும் மனதிலும் இருந்தால் போதும்.
என்னைப் பொறுத்தவரை காலில் விழுபவன் முட்டாள், விழவேண்டுமென எதிர்பார்ப்பவன் அவனைவிட முட்டாள்.
(இதில் நான், சொந்தங்களிடையே சுயநலமில்லாமல் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை பற்றிச் சொல்லவில்லை.)
எல்லோர்க்கும்:
ஒரு மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழாத சுயமரியாதையை நாம் எல்லோரிடமும் எதிர்பார்க்க வேண்டும்.
'கும்புடுறேனுங்க' என்று தன்னிடம் பிறரை காலங்காலமாகச் சொல்ல வைத்தவர்கள் 'கும்புடுறேனுங்க' என்று தானே 'கீழானவர்களாக' நினைத்தவர்களிடம் சொல்லும் நிலையில் வந்தபோது நாசூக்காக தவிர்த்து ஒதுங்கும் நிலை தான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இதில் முஸ்லிம்கள், பிராமணாள் என்று பார்க்க வேண்டியதில்லை. முஸ்லிம்கள் பொதுவாக யார்காலிலும் விழுவதில்லை என்பதையும் நோக்க வேண்டும்.
//
ஆனால் உங்களைப் போன்ற குஞ்சுகள் மட்டும் மூச்சுக்கு முன்னூறு தடவை மனிதனை பார்பான் என்று கூறி அவமானப்படுத்துவீர்கள் - அது சரி- அப்படித்தானே?
//
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி கதைதான்.
இதே பண்டாரங்கள் ஜெயெந்திரன் காலில் விழ சொன்னால் கேள்வி கேட்பாமல் விழுவார்கள்.
Post a Comment