.

Friday, May 18, 2007

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. இருபத்திஐந்தாயிரம் அபராதமும் விதித்து மும்பை சிறப்பு தடா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 93 ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 23 பேரை தவிர, குற்றவாளிகள் 100 பேருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என மும்பை தடா நீதிமன்ற சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே ஏற்கெனவே தனது தெரிவித்திருந்தார். அதன்படி, குற்றவாளிகள் 100 பேரில் 5 பேருக்கான தண்டனையை இன்று சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே அறிவித்தார். யாஷ்வாந்த்ராவ் போயின்கர், அப்பாஸ் தாவுத் ஷைகேந்தர், ஷாஜாகான் ஷைகேந்தர், ரஷித் உமர் ஆல்வரே மற்றும் ஷெரிப் கான் ஆதிகாரி ஆகிய ஐந்து மீனவர்களே இந்தத் தண்டனையை பெறுபவர்கள் ஆவர். இவ்வழக்கில் குற்றாவாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், முதலில் 5 பேருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும், பின்னர் 8 முதல் 10 நாட்களுக்குள் தண்டனை அறிவிப்புகள் நிறைவடையும் என்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகிம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த வழக்கிலிருந்து நன்னடத்தைக் காரணமாக தங்களை விடுவிக்குமாறு சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களான யூசுப் நுல்லாவா, ருசி முல்லா மற்றும் கேர்ஸி அடேஜினியா ஆகியோர் சில மாதங்களுக்கு முன் மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த மனுவை பரிசீலிக்கும் மும்பை தடா நீதிமன்றம், சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குமா அல்லது அவர்களை நன்னடத்தை காரணமாக விடுவிக்குமா என்பதும் விரைவில் தெரியவரும்

2 comments:

Anonymous said...

எப்போ சொல்ல போறிங்க கோவை குண்டு வெடிப்பு வழக்கை...

கோவை ரஹ்மான்.

வஜ்ரா said...

It is indeed intriguing that a similar kind of bomb blast was happening inside a Mosque in Hyderabad on the same day of judgement for 93 mumbai blast.

-o❢o-

b r e a k i n g   n e w s...