சிதம்பரம், மே 16: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
தமிழில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி மறுத்து மயிலாடுதுறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவனடியார் உ.ஆறுமுகசாமி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு மேல்முறையீடு செய்தார்.
விசாரணை முடிந்து ஆணையர் த.பிச்சாண்டி அளித்த தீர்ப்பு விவரம்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அனைவரும் நின்று வழிபடும் இடத்திலிருந்து தமிழில் இறைவனை போற்றிப் பாடுவதை தடுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஆறுமுகசாமி தெய்வத்தமிழ் பதிகங்களை பாட அனுமதி மறுப்பது அவர் பிறந்த சாதியின் காரணமாக ஒதுக்கப்படும் செயலாகும்.
பழக்க வழக்கங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது.
Dinamani
Wednesday, May 16, 2007
நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு
Labels:
ஆன்மீகம்,
சட்டம் - நீதி,
சமூகம்,
சர்ச்சை
Posted by Boston Bala at 4:29 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
தமிழ்நாட்டில் தமிழர்கள் கட்டிய ஆலயத்தில் ... தமிழில் வழிபாட்டு பாடலை பாடக் கூட பாட நீதிமன்றம் தலையிட்டு தீர்த்துவைப்பது என்பது தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விசயம்.
பிரச்சனை தீர்ந்ததில் மகிழ்ச்சி !
தமிழில் பாடுவதால்
சுனாமியோ, பூகம்பமோ வருதான்னு பார்ப்போம் !
:))
இந்த செய்தியை போடுங்க...
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070515154605&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0
தமிழர்கள் உடனே மகிழ்ச்சி அடைய வேண்டாம்.
உச்ச அநீதி மன்றம் என்று ஒரு அமைப்பு இருப்பதை மறந்துவிட வேண்டாம்.
முன்பெல்லாம் தீட்சதர்கள் பக்கம்தான் தீர்ப்புக்கள்.இப்போது மட்டும் என்ன இறைவனா வந்து தமிழுக்கு வாதாடப் போகிறார்?
அங்கே கிடப்பில போட்டால் சுமார் பத்து ஆண்டுகள் கிடக்கும்.
ஆறு மாதத்திற்கு முன் சென்னையில் கருத்து.காம் (கனிமொழி,கார்த்திக் சிதம்பரம்) நடத்திய கருத்தரங்கில் தமிழறிஞர் அறிவொளி பேசியபோது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தில்லையில் தமிழில்தான் வழிபாடு நடந்து வந்தது, இடையிலே வந்தவர்கள்தான் அதை சம்ஸ்கிருதத்திற்கு மாற்றினார்கள் என்றார்.
இன்னொரு செய்தி. வள்ளலார் கோவிலில் இனி
ஜோதி வழிபாடு மட்டுமே. விக்கிரக வழிபாடு
கிடையாது.
என்ன நடக்குது?
மிகவும் நல்ல செய்தி. இந்த நல்ல செய்தி தொடர்ந்து நடக்க வேண்டும்.
Post a Comment