.

Wednesday, May 16, 2007

விமான கண்காணிப்பை பலப்படுத்த இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம்.

இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம் அமைக்கத் தேவையான நிலத்தை தரும்படி தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியக் கடற் பகுதியில் வான் வழி கண்காணிப்பு எளிதாகும் என்று இந்தியக் கடற்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் வைஸ்.அட்மிரல் ஆர்.பி. சுதன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இது பற்றி சென்னையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடந்து வருவதால் இந்தியக் கடல்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இராமநாதபுரத்தில் விமான ஓடுதளத்தை விரிவுபடுத்த நிலம் தேவைப்படுகிறது. இங்கு விமான ஓடுதளம் அமைப்பதன் மூலம், வான் வழியாக எளிதில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளலாம். இதற்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி மாநில அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகின்றன.இலங்கையில் நீடித்து வரும் சண்டையால் கடல் பகுதியில் ஆயுதம் போதைப் பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைத் தவிர்க்க, இந்தியக்கடல் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், அந்நாட்டு ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளால் தமிழகத்துக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இலங்கை கடற்படையுடன், தகவல் பரிமாற்றம் மட்டும் செய்து கொள்கிறோம். அவர்களும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் புலிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக அங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையுடன் கூட்டு ரோந்து இல்லை. விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக பாக்.ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். இந்தியா முழுக்க கடல் பாதுகாப்புக்காக 50 ரோந்து கடற்படை படகுகள், இதில் தமிழக கடல் பகுதிக்கு ஏழு கப்பல்கள் உள்ளன. இவற்றில் நான்கு படகுகள் பாக் ஜலசந்தி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முன் இரண்டு கப்பல் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தன. மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் அதிகமாக கிடைப்பதால் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர்.சமீபத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிப்பட்டுள்ள மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இந்திய கடற் படைக்கு இராமநாதபுரத்தில் பெரிய விமான தளம் அமைக்க தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம். அதுபோல தூத்துக்குடி,எண்ணூர் மற்றும் சென்னைத் துறைமுகங்களில் கடற்படைக்கு தேவையான இடவசதி செய்து தர மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு பிரேம் சுதன் கூறினார்.

நன்றி : வீரகேசரி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...