.

Wednesday, May 16, 2007

தாஜ்மஹாலை பாதுகாக்க புது முயற்சி

நவீனகால உலக அதியசங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் கட்டிடத்தை அண்மித்த பகுதிகளில் காற்றில் மாசுகட்டுப்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், தாஜ்மஹாலின் புகழ்பெற்ற வெளிப்புற வெள்ளை பளிங்குக் கற்கள் மெதுவாக நிறமிழந்து மஞ்சள் நிறமாக மாறி வருவதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று கூறியுள்ளது.

இதற்கு முன்னர் முயற்சிக்கப்பட்ட, பளிங்குக் கற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சுத்திகரிப்பு முறை ஒன்றினை மீண்டும் மேற்கொண்டு, இந்த 17ம் நூற்றாண்டு நினைவுச் சின்னத்தை பழைய நிலைக்கே, அதாவது வெள்ளை நிறத்தை மீண்டும் கொண்டு வர மற்றுமொருமுறை முயற்சிக்கலாம் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் தாஜ்மஹாலிற்கு 30 இலட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டப்படி இந்த புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே, வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC NEWS | South Asia | Face mask to beautify Taj Mahal (BBC Tamil)

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...