முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.2 கோடி வழங்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்குக்காக சென்னையில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார் செங்கோட்டையன். விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு நீதிபதி மீனாட்சி சுந்தரம் ஒத்தி வைத்தார்.
1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பிறந்தநாள் பரிசாக காசோலை மூலம் ரூ. 2 கோடி பணம் அனுப்பப்பட்டது. இந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.
இது பற்றி வருமானவரித்துறையின் புகாரின்பேரில் சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவுக்குப் பணம் அனுப்ப ஏற்பாடு செய்ததாக செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Dinamani
Wednesday, May 16, 2007
ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை
Labels:
அரசியல்,
ஊழல்,
சட்டம் - நீதி,
தமிழ்நாடு
Posted by Boston Bala at 3:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment