அமைப்பு ரீதியான கோளாறுதான் உத்தர பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
எனினும் குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகுமாறு கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, இந்தத் தேர்தலில் மதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், காங்கிரஸ் கட்சியின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்த போதிலும் அதனை வாக்குகளாக மாற்றும் அளவுக்கு அமைப்பு பலமாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
Wednesday, May 16, 2007
உபி தோல்விக்கு அமைப்பு கோளாறே காரணம் - சோனியா.
Labels:
அரசியல்,
தேர்தல்முடிவு
Posted by
Adirai Media
at
6:38 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment