இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரப்படவில்லை். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக தோற்றுத் திரும்பியதால், சம்பளப் பாக்கியைக் கேட்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகிறார்கள்.
உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம். இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சம்பளம் பெறுகிறவர்கள்.
கடந்த அக்டோபரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிப் போட்டியிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படாமல் உள்ளது. இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்று திரும்பியது. இந்தியாவில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் தொடர்களில் ஆடியுள்ளது.
சம்பளப் பாக்கி குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், "சம்பளத்தை நிறுத்தியெல்லாம் வைக்கவில்லை. வீரர்களின் காண்டிராக்ட் கையெழுத்தானதும் நிலுவையில் உள்ள சம்பளம் கொடுக்கப்பட்டு விடும். ஒப்பந்தம் இன்னும் தயாராகாததால்தான் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது ஒரு பிரச்சினையே அல்ல", என்றார்.
DNA - Sport - Cash-rich BCCI has not paid cricketers for last 7 months - Daily News & Analysis
Saturday, May 5, 2007
7 மாதமாக சம்பளம் வாங்காத கிரிக்கெட் வீரர்கள்
Labels:
கிரிக்கெட்,
விளையாட்டு
Posted by
Boston Bala
at
12:29 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment