.

Tuesday, May 15, 2007

சற்றுமுன்: இங்கிலாந்தில் மேயராகும் முதல் இந்தியர்

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் நகரின் மேயராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் மாநகராட்சியில் தேர்தல் நடந்தது. அதில் பார்ட்டன் டிரெட்ஒர்த் பகுதி கவுன்சிலராக தொழில் கட்சி சார்பில் இந்தியாவை சேர்ந்த ஹர்ஜித் கில் போட்டியிட்டார். அவர் அமோக வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் கிளவ்செஸ்டர் நகரின் மேயராக தேர்ந்து எடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

ஹர்ஜித் கில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள தகோகாவை சேர்ந்தவர். ஜலந்தரில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பிரபலமான ஹாக்கி வீரர் ஆவார். இவர் இந்திய ஆணியில் இடம் பெற்று பல சர்வேதச போட்டிகளில் ஆடியுள்ளார்.

தற்போது ஹாக்கி போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். ஹர்ஜித் கில் 1978ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அதே ஆண்டே இங்கிலாந்தை சேர்ந்த ஜம்மிந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குர்கமால் (26) மகனும், அம்ரிதி (24) மகளும் உள்ளனர். ஹர்ஜித் கிளவ்செஸ்டர் நகரின் 527வது மேயராக வருகிற 21ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார் கில்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

2 comments:

Unknown said...

இந்தியக் குடியுரிமை உடையவர்கள் (இந்தியர்கள்) இங்கிலாந்து தேர்தல்களில் நிற்கமுடியுமா?

"இந்திய வம்சாவழியினர்" (Indian origin) என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கவிதா | Kavitha said...

கல்வெட்டு அவர்களே,

அவர் 'இந்தியக் குடியுரிமை பெற்றவரா?' இல்லை 'இந்திய வம்சாவழியினரா?' என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்..

-o❢o-

b r e a k i n g   n e w s...