கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்க சென்னை அருகே நெமிலியில் 40 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். செம்பரம்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் தொடக்க விழாவில் வியாழக்கிழமை அவர் பேசியதாவது:
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினமும் 53 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படும். நாட்டின் 2-வது பெரிய சுத்திகரிப்பு நிலையமாக இது திகழும். சென்னையின் மக்கள் தொகை 53.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது.
வடசென்னை பகுதிக்காக மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை கட்டும் பணிகள் வரும் ஆண்டில் ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும். இதே போல தென்சென்னை மக்களுக்காக நெமலியில் 40 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும். இத்திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.
குடிநீர் தரம் அறிய நவீன சாதனம்: குடிநீரின் தரத்தைக் கண்டறிய உதவும் நவீன சாதனத்தை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் இச் சாதனத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது என்றார் அமைச்சர்.
தினமணி
NDTV.com: New water treatment plant in Chennai
Friday, July 20, 2007
சென்னை அருகே நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: அமைச்சர் ஸ்டாலின்
Labels:
தமிழ்நாடு
Posted by Boston Bala at 2:52 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment