.

Friday, July 20, 2007

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் சூடு பிடிக்கிறது

குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடந்து முடிந்த வேளையில், அரசியல் கூட்டணிகள் தங்கள் கவனத்தை துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளன. முதலில் இறங்கிய UNPA உபி சமாஜ்வாடிக் கட்சியின் ரஷீத் மசூத்தை நிறுத்தியுள்ளன. அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் ஆளும் கூட்டணி ஏதேனும் சிறுபான்மை வேட்பாளரையே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. வியாழனன்று கூடிய இடதுசாரிக் கட்சிகள் ஆளும் கட்சிக் கூட்டணி வேட்பாளராக சிறுபான்மை கமிஷனின் தலைவரும் முன்னாள் வெளியுறவு அதிகாரியுமான ஹமீத் அன்சாரியை தெரிவு செய்துள்ளன. அரசியல்வாதியல்லாத அரசியல் தெரிந்த நபரைத் தேடிய இடதுசாரிகளின் விருப்பத்திற்கு பொருத்தமானவராக அன்சாரி அமைகிறார். மேலும்...IBNLive.com >

இதனிடையே தமிழக முதல்வர் மு.கருணாநிதி சுர்ஜித் சிங் பர்னாலா பெயரை பரிந்துரைத்திருக்கிறார். பஞ்சாபின் முன்னாள் முதல்வராக இருந்துள்ள பர்னாலா அனைத்துக் கட்சியினருடனும் சுமுகமாக செல்லக் கூடியவர். வெளியேறும் ஷெகாவத்திற்கு இணையான அரசியல் செல்வாக்கு உள்ளவர்.

ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும் தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள் ஜூலை 23 ஆகும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...