- நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. இந்த விவரம் தெரியாமல் ஓட்டுப் போடுவதற்காக பாராளுமன்ற வாக்குச் சாவடிக்கு வந்த நியமன உறுப்பினர் கபிலா வாத்சாயன் பின்னர் திரும்பிச் சென்றார்.
- டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநில ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ. ஆர்.எல்.மகாதோ டெல்லி சட்டசபை கட்டிடத்துக்கு ஆம்புலன்சில் வந்து ஓட்டுப் போட்டார்.
- டெல்லி திகார் சிறையில் இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி. பப்பு யாதவ் சிறை வாகனத்தில் வந்து ஓட்டுப் போட்டார்.
- இதேபோல் பீகாரில் உள்ள சிறையில் இருக்கும் முகமது சகாபுதீன் எம்.பி. பாட்னா நகரில் உள்ள சட்டசபைக்கு சென்று வாக்கு அளித்தார்.
- பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டுவிட்டு திரும்பும் போது 'பெண்கள் சக்தி வாழ்க' என்று கோஷம் போட்டனர்.
- மத்திய மந்திரி பவன்குமார் பன்சால் தவறுதலாக முதலில் செகாவத்துக்கு ஓட்டுப் போட்டு விட்டார். உடனே அந்த தவறை உணர்ந்த அவர் தேர்தல் அதிகாரியிடம் கூறி வேறு வாக்குச் சீட்டு வாங்கி மறுபடியும் ஓட்டுப் போட்டார். இதனால் அவர் முதலில் வாக்கு அளித்த சீட்டு நிராகரிக்கப்பட்டது.
- ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் ஓட்டுப் போடுவதற்கு தவறாக தனது பேனாவை பயன்படுத்தி விட்டதாக கூறினார். இதனால் அவர் ஏற்கனவே வாக்களித்த வாக்குச் சீட்டு மாற்றபட்டு அவருக்கு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
- இதேபோல் ஜெயாபென் கக்கர் (காங்கிரஸ்) அடுத்தடுத்து வாங்கிய இரு வாக்குச்சீட்டுகளும் தவறாக இருந்ததால் அவை மாற்றப்பட்டு வேறு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
- தெலுங்கு தேசம் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பாரெட்டி, ஜி.நாகசிவா ரெட்டி ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டனர்.
- எம்.பி.க்களான நடிகைகள் ஹேமமாலினி, ஜெயப்பிரதா, ஜெயாபச்சன் ஆகிய மூவருமே ஓட்டுப் போடவில்லை. ஹேமமாலினி நியமன உறுப்பினர் என்பதாலும், மற்ற இருவரும் தேர்தலை புறக்கணித்த சமாஜ்வாடியை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஓட்டுப் போடவில்லை.
தினத்தந்தி
6 comments:
One more ADMK's Turn Aruound
மந்திரியே தப்பா வோட்டு போட்டா எப்படி
கிரிமினல்கள், வாக்களிக்கத் தெரியாத பிரதிநிதிகள், வோட்டு போடாத வோட்டு வாங்கி ஜெயித்தவர்கள், ஒட்டுண்ணிகள்... எல்லாம் சேர்ந்த கலவை இது
தவறாக வாக்களித்தவர்கள், தவறாக
வாக்களித்து மீண்டும் வாக்குச்சீட்டு
பெற்று வாக்களித்தவர்கள், தப்பு தப்பாக வாக்குசீட்டைப் பயன்படுத்தியவர்கள், என்ன அலங்கோலம்டா, சாமி!
இப்படிப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கும்(!) ஒரு ஜனாதிபதியை நினைத்தால்
தலைசுத்துதடா, தம்பிரானே!
"மத்திய மந்திரி பவன்குமார் பன்சால் தவறுதலாக முதலில் செகாவத்துக்கு ஓட்டுப் போட்டு விட்டார். உடனே அந்த தவறை உணர்ந்த அவர் தேர்தல் அதிகாரியிடம் கூறி வேறு வாக்குச் சீட்டு வாங்கி மறுபடியும் ஓட்டுப் போட்டார். இதனால் அவர் முதலில் வாக்கு அளித்த சீட்டு நிராகரிக்கப்பட்டது"
பாலா! பொது நலன் வழக்கு தொடரமுடியும் . யாராவது தொடர்வது நல்லது.
புள்ளிராஜா
சாதாரண தேர்தல்களில் சிறைச்சாலையில் இருப்பவர்கள் வாக்களிக்க முடியுமா? சிறையிலேயே வாக்குச்சாவடி அமைத்திருப்பார்களா?
(அமெரிக்காவில்: USATODAY.com - felons' voting rights - States that prevent felons from voting while in prison or on probation or parole. Some state also restrict the voting rights of some or all felons who have completed probation and parole.)
Post a Comment