.

Sunday, July 8, 2007

வன்முறைப் பேச்சு: உமாபாரதி மீது தமிழ்நாட்டில் வழக்கு.

பாரதீய ஜனதாவிலிருந்து பிரிந்து பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்த சாமியாரிணி உமாபாரதி ராமேஸ்வரத்தில், பாரதீய ஜனசக்தி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்துக்காக ராமர் பாலத்தை உடைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், ராமர் பாலத்தை பாதுகாக்கவும் பாரதீய ஜனசக்தி சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனசக்தி தலைவர் உமாபாரதி சேது சமுத்திர கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.

ஒரு வாரத்துக்குள் கால்வாய் தோண்டும் பணியை அரசு நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் உயிரை பறிக்கவும் தயங்கமாட்டோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உமாபாரதி மீது வன்முறையை தூண்டும் விதமாகவும், பொதுஜன அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக இந்திய தண்டனை சட்டம் 153ஏ மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...