.

Sunday, July 8, 2007

பணிபுரியும் பெண்கள்: விரைவில் பாதுகாப்பு சட்டம்.

பணியாற்றும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை தடுக்க வகை செய்யும், பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் ஆண்கள் இனி, கணிசமான அளவில் அபராதம் செலுத்த வேண்டும்.

வீடுகளில் கணவனின் கொடுமைக்கு ஆளாகும் மனைவிகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சமீபத்தில் குடும்ப வன்முறை சட்டம் கொண்டுவரப்பட்டது. குடித்து விட்டு வந்து மனைவிகளை அடித்து உதைத்து கொடுமைப் படுத்திய பல கணவர்கள் தற்போது இந்த சட்டத்தின் பலனாக கம்பி எண்ணி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசின் கவனம் தற்போது பணிபுரியும் பெண்களை நோக்கி திரும்பியுள்ளது. சக ஆண் ஊழியர்கள் அல்லது உயரதிகாரிகள், மூன்றாம் நபர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. புகார் செய்தால் வேலை போய்விடுமோ என்ற பயத்தில் பல பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என பெண்கள் அமைப்புகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தன.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...