.

Sunday, July 8, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம்.

புற்றுநோய் தாக்குதலால் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இன்று காலை 08:45 மணியளவில் மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 80 ஆகும்.
கடந்த மூன்று மாதங்களாக டெல்லியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவரது உடல் டெல்லியில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உடலுக்கு தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சந்திரசேகர் உடல் தகனம் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

சந்திரசேகர் 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் 21-ந்தேதி வரை பிரதமராக பதவி வகித்தார்.

வி.பி. சிங் அரசு கவிழ்ந்ததால் சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆனார். அதன் பிறகு காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் பதவி இழந்தார். பொது தேர்தல் வரை பிரதமராக நீடித்தார்.

பிரதமர் மன்மோஹன் சிங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...