.

Sunday, July 8, 2007

மேற்குவங்கம்: கடும் மழையால் 43 இலட்சம் மக்கள் பாதிப்பு.

கடந்த சில நாட்களாக, வட இந்திய மாநிலங்களில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கத்தக்கதாக மழை வெள்ளத்தின் வீச்சு இருந்தது.

மேற்கு வங்காளத்திலும் வரலாறு காணாத அளவுக்கு மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் 8 மாவட்டங்களில் வெள்ள நிலைமை மிக மோசமாக இருக்கிறது. இங்கு 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்காளத்தில் மழை வெள்ளத்துக்கு 27 பேர் பலியாகிவிட்டார்கள்.

மேற்கு மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதே போல் ஒரிசா மாநிலத்தில் பாலாசூர், பத்ராக் மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...