சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க, அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுவது தொடர்பாக, ஈரோடு கொங்கு கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: வடமாநிலங்களில், தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றிக் கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என அவர்கள் நினைக்கின்றனர்.
ஜான்சிராணி, பகத்சிங் போன்ற தியாகிகளை மட்டுமே அவர்கள் தெரிந்துவைத்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன் ஆகியோரை வடமாநிலத்தவர்கள் அறியும் வகையில் பரப்ப வேண்டும். தீரன் சின்னமலை வரலாறை திரைப்படமாக எடுக்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும். சமுதாயப் படம் என்றால்தான் சிறப்பாக ஓடும்; சரித்திரப் படம் ஓடாது என்ற நிலையை மாற்ற வேண்டும். நடிகர் வடிவேலு நடித்த சரித்திரப் படம் அண்மையில் சிறப்பாக ஓடியது என்றார்.
தினமணி
Sunday, July 8, 2007
தீரன் சின்னமலை வரலாறை திரைப்படம் எடுக்க அரசு நிதிஉதவி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் இளங்கோவன்
Posted by
Boston Bala
at
11:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment